Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Tuesday, 21 November 2023

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் ‘பார்க்கிங்’

 *பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் படம் U/A சான்றிதழைப் பெற்றுள்ளது!*







ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ யு/ஏ சான்றிதழை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது என்பதை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் சரியான திட்டமிடலுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ்ஸின் இசை, ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு ஆகியவை இந்தப் படத்தை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றி இருக்கிறது. 


'பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது பார்வையாளர்களுக்கு சென்னையின் தெருக்களைப் பற்றி  சஸ்பென்ஸான ஒரு பயணத்தை வழங்க இருக்கிறது. சினிமாத்துறை மற்றும் வர்த்தக வட்டாரங்களில் படம் குறித்தான அறிவிப்பு வந்ததில் இருந்தே கிடைத்துவரும் நேர்மறையான வரவேற்பிற்கு படக்குழுவினர் இந்தத் தருணத்தில் நன்றி தெரிவிக்கின்றனர். 


’பார்க்கிங்’ படத்திற்கு தற்போது கிடைத்துள்ள இந்த யு/ஏ சான்றிதழ் என்பது அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கு ஏற்றது என்பதை உறுதிப்படுத்துகிறது. பார்வையாளர்களுக்கும் சினிமா ஆர்வலர்களுக்கும் சீட்டின் நுனியில் அமரும்படியான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்க இருக்கும் ‘பார்க்கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.


*பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி பற்றி:*


’பார்க்கிங்’ படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பு நிறுவனங்களான பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை தரமான மற்றும் மாறுபட்ட சினிமா அனுபவங்களை கொடுக்கும் அதன் தரத்திற்காக சினிமாத்துறையில் பெயர் பெற்றவை. தமிழ் சினிமாவைத் தாண்டியும் இந்திய சினிமாவிலும் தனது அளப்பறிய பங்கை செய்து வருகிறது இந்நிறுவனங்கள்.

No comments:

Post a Comment