Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Monday, 13 November 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி

 தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு  படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்....


இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால்  நடிப்பில்  உருவாகி வரும் #vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு  மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் திபாவளி தினமான இன்றும்  படப்பிடிப்பு நடைப்பெற்று  வருவதால் படப்பிடிப்பில் பணியாற்றும் அனைவருக்கும்  நடிகர்  விஷால் தரப்பிலிருந்து சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. 


நடிகர் விஷால் அவர்களின் படப்பிடிப்பில் எப்போதும்   கடைநிலை ஊழியர் தொடங்கி பெரிய நட்சத்திரங்கள்  உட்பட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உறுதியாக கடைபிடித்து வருகிறார்.


 மேலும், கேப்டன் விஜயகாந்த்  அவர்கள் தொடங்கி வைத்த இந்த அனைவரும் சமம் நாமும் தொடர வேண்டும் என 10 வருடங்களுக்கு  முன்பே அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்று தன்னுடைய படப்பிடிப்பிலும் தன்னுடைய அலுவலகத்திலும் நடிகர் விஷால்  உத்தரவாக பிறப்பித்து இருந்ததது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment