*’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.
சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவித்தார்கள். அதன் பிறகு என்னை நம்பி யாருமே பணம் தரவில்லை. கேஜேஆர் சாரிடம் போய் படம் செய்யலாம் என்று சொன்னதும் அவர் உடனே சரி என்றார். அந்தப் படம்தான் ‘டிக்கிலோனா’. ஞானவேல் சாருக்கும் நன்றி. சந்தீப் கிஷன், அஞ்சலிக்கும் நன்றி. என் நண்பர்கள், குடும்பம், மனைவிக்கும் நன்றி. ‘டிக்கிலோனா’ முடித்தப் பிறகு எனது அசிஸ்டெண்ட் ராம் வைத்து படம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஹரிஷ் இந்தப் படத்திற்குள் வந்த பிறகுதான் இது பெரிய படமாக மாறியது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”.
நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், சுதன் சார், ஸ்ரீனிஸ் அனைவருக்கும் நன்றி. இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம். அதை ரசிக்கும்விதமாக சொல்லியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன். படத்தின் நாயகன் ஹரிஷ், இந்துஜா, பிரார்த்தனா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்”.
இயக்குநர் அருண்ராஜ் காமராஜா, “படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதையும் தாண்டி நண்பர்கள் ரீ யூனியன் போல இது உள்ளது. புது திறமைகளை கொண்டு வரும் ஸ்ரீனிஸூக்கு நன்றி. இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். இரண்டு பேருக்கும் இடையிலான ஈகோ கிளாஷ்தான் படம். எம்.எஸ். பாஸ்கர் சார் படத்தில் ஈவிலாக இருப்பார். ஹரிஷ் கல்யாண் வயலண்ட்டாக நடித்துள்ளார். எல்லோருக்கும் முன்பு இந்தப் படம் பார்த்ததில் மகிழ்ச்சி. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வாழ்த்துகள்”.
நடிகை பிரார்த்தனா, “எம்.எஸ். பாஸ்கர் சார் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பார். அவருடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் அவருடைய மகளாக நிறைய கற்றுக் கொண்டேன். ஹரிஷ் கல்யாண், இந்துஜா, இயக்குநர் ராம் என அனைவருக்கும் நன்றி”.
நடிகர் சுரேஷ், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக ஸ்ரீனிஸ் கேட்டபோது எனக்கு குழப்பாகவே இருந்தது. ஆனால், என்னுடைய நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தில்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நடிப்புக்கு புதிது என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால், இயக்குநர் ராம் நிறைய ஊக்கம் கொடுத்தார். எனக்கு படத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி”.
நடிகர் ராகுல் மணி, “2013ல் நான் ஒரு படம் ஹீரோவாக நடித்தேன். பத்து வருடம் கேப் வந்துவிட்டது. ஆனால், எனக்கு ஊக்கம் கொடுத்து கூப்பிட்ட இயக்குநருக்கு நன்றி. ஹரிஷ், இந்து என அனைவருக்கும் நன்றி. படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”.
இயக்குநர் ரவிக்குமார், “இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். பல இடங்களில் விறுவிறுப்பாகவும் சூடாகவும் இருக்கும். இயக்குநரின் முதல் படம் போல இருக்காது. நிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள்”
இயக்குநர் ரத்னகுமார், “தயாரிப்பாளரின் ஸ்ரீனிஸின் பிறந்தநாள் இன்று கிடையாது. டிசம்பர் 1தான். இயக்குநர் ராமும் நன்றாக செய்துள்ளார். இந்த படத்தின் டீமோடு எனக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஹரிஷ், பிரார்த்தனா, இந்துஜா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழியிலும் இந்தப் படம் ரீமேக் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. படம் வெளியான பின்பே உங்களுக்கேத் தெரியும்”.
இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “பக்கத்துவீட்டுக்காரர்களுக்குள் நடக்கும் சண்டைதான் இந்தப் படம். ரொம்ப எளிமையான கதை என்பதை விட சாமானியர்களின் பிரச்சினையைப் பேசும் படம். ‘குட்நைட்’ படத்தைப் போல எளிய கதையாக இருக்கும். ஹரிஷ், இந்துஜா என அனைவருமே சின்சியரான திறமையான நடிகர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.
இயக்குநர் கார்த்திக் யோகி, “இந்தப் படம் பார்த்துவிட்டேன். இயக்குநர் ராமுக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. ஹரிஷின் திறமை சிறப்பாக இதில் வெளிப்பட்டுள்ளது. இந்துஜா, பிரார்த்தனா, தொழில்நுட்பக் குழு அனைவருக்கும் நன்றி”.
கலை இயக்குநர் ராகுல், “’லவ் டுடே’ படம் போல, இந்தப் படமும் எனக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. டீமும் நிறைய சப்போர்ட் கொடுத்தார்கள். சந்தோஷமாக இருந்தது. இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக இது இருக்கும்”.
ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி, “சினிமாவில் நிறைய இயக்குநர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இயக்குநர் ராம் சிறப்பாகக் கொடுத்துள்ளார். அனைவருக்கும் நன்றி”.
எடிட்டர் பிலோமின்ராஜ், “படத்தின் டிரெய்லர் போலவே படமும் சிறப்பாக இருக்கும். உங்களைப் போலவே நானும் படத்திற்கு ஆவலாக உள்ளேன்”.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்., “இந்தப் பிரச்சினைக்களுக்காக எல்லாம் படம் எடுப்பீர்களா என நிறைய கமெண்ட்ஸ் இதன் டீசரில் பார்த்தேன். ஈகோதான் இங்கு பெரிய பிரச்சினை. படத்தில் வில்லன் பெரிதாக இருந்தால் படம் ஹிட்டாகும். அதுபோல, இந்தப் படத்தில் வில்லன் பெரிதாக இருக்கும். எளிய கதையை படம் முழுக்கக் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தப் படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநருக்கு முதல் படத்தை விட இரண்டாவது படம் முக்கியமானது. அதனால், இயக்குநர் ராம் இரண்டாவது படத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஹரிஷ், எம்.எஸ். பாஸ்கர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். உங்களை படம் ஏமாற்றாது” என்றார்.
நடிகை இந்துஜா, “இந்த அழகான படத்தைக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எல்லோருடைய கதாபாத்திரங்களும் படம் பார்க்கும் உங்களுக்கு நிச்சயம் கனெக்ட் ஆகும். கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ற போது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால், கதை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். இதில் ஹரிஷ்- எம்.எஸ். பாஸ்கருடைய ஈகோ பிரச்சினை மட்டுமல்ல. பெண்களின் பார்வையிலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். படம் வெளிவருவதற்கு முன்பே படம் குறித்தான பாசிடிவ் டாக் ஆரம்பித்து விட்டது. ஹரிஷ் எப்போதும் பாசிட்டிவான நபர். இந்த நல்ல குணத்திற்காகவே அவர் பெரிய இடத்திற்குப் போக வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘பார்க்கிங்’ அமைய வேண்டும். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்ட். அவருடன் நடிப்பது எனக்குப் பெருமை. நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். செட்டில் கதைகள் எல்லாம் சொன்னார். பிரார்த்தனா, ரமா அம்மா என எல்லோருமே இயல்பாக நடித்துள்ளனர். பிலோமின்ராஜ், சாம் சி.எஸ். என அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். இந்த நேர்த்தியான படத்தைக் காண்பிக்க ராமின் எழுத்து உதவியது. இந்த லைனை வைத்து ஒரு முழுநீளப் படம் கொடுத்ததற்கு நன்றி ராம். அவருடைய தெளிவினால்தான் நாங்களும் நம்பிக்கையோடு நடித்தோம். நல்ல படம் நடித்த நிறைவு உள்ளது. நன்றி”.
இயக்குநர் ராம், “எனது குடும்பத்திற்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீனிஸ் சாருக்கும் என் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. அவர் எனது அண்ணன் போல. முதலில் இந்தப் படத்தின் கதை கேட்டதும் சுதன் சாருக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்திற்காக என்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணித்த அனைவருக்கும் நன்றி. நம் எல்லோருக்கும் எதாவது ஒரு பேஷன் இருக்கும். அதை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருப்போம். அதையும் நம் குடும்பத்தையும் உடைக்கும்படி ஒரு பிரச்சினை வரும்போது நிச்சயம் நாம் கோபப்படுவோம். முதல் படத்தில் முடிந்தளவு பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியான கதை வேண்டும் என்பதால்தான் இதை எடுத்தேன். ஹீரோவாக இந்தக் கதையில் இருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும். அதை அப்படியே ஒத்துக் கொண்ட ஹரிஷ் அண்ணாவுக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர் போன்ற லெஜெண்ட்ரி நடிகரோடு வேலைப் பார்த்தது பெருமை. நிறைய விஷயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இந்துஜா, பிரார்த்தனா, ரமா என அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். பிலோமின், சாம் சி.எஸ். என இந்தப் படத்தில் அமைந்த தொழில்நுட்ப அணி எனக்கு மிகப்பெரிய பலம். குடும்பத்தோடு பாருங்கள். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள்” என்றார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண், “ஒரு படம் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு அப்படியான நல்ல படத்தை தவற விட்டிருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டிருப்பேன். அப்படியான நல்ல கதையை எனக்குக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உங்களுடைய படம் போல நினைத்து இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்து மேடையில் பாராட்டிய இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு நெகட்டிவ் ஷேட் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார். இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஸ்பேஸ் எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இந்துஜா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
No comments:
Post a Comment