Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Tuesday, 21 November 2023

அன்னபூரணி’ படத்திற்காக தொழில்முறை சமையல் கலைஞராக மாறிய

 *‘அன்னபூரணி’ படத்திற்காக தொழில்முறை சமையல் கலைஞராக மாறிய நயன்தாரா!*











திரையில் தனது கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கொடுப்பதில் நடிகை நயன்தாரா எப்போதுமே தயங்குவதில்லை. இந்த தனித்த விஷயம்தான் சந்தேகத்திற்கு இடமின்றி திரைத்துறையில் அவரை இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. இந்த நிலையில், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் இன்னொரு படமாக அவர் 'அன்னபூரணி- The Goddess of Food’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 

 

இந்தத் திரைப்படம் சமையலைச் சுற்றி வருவதால், செஃபாக நடிகை நயன்தாரா தனது 100% சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். மேலும், காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது. சமையல்காரரின் சரியான குணாதிசயங்களாக இருக்கும் பேன் ஃபிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டார் நயன்தாரா. இதில் ஏமாற்றும் விதமாக ஒரு ஷாட் கூட இல்லை என்றும், நயன்தாரா எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார் என்றும் குழு உறுதிப்படுத்தியுள்ளது. 


படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பல விஷயங்களை படமாக்க வேண்டியிருந்ததால் நடிகை நயன்தாரா தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்துள்ளார். நடிகை நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு 'அன்னபூரணி' படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோது கூட, தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார். 


இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (உரையாடல்கள்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளவர்கள்.

No comments:

Post a Comment