Anyone But You Movie Review
Hello Viewers, இன்னைக்கு நம்ம show-ல எந்த படத்தப்பத்தின review பாக்கப்போறோம்னா இயக்குநர் “Will Gluck” இயக்கத்துல வெளி வந்துருக்குற “Anyone but You”-ன்ற Hollywood படத்த பத்தி தான் பாக்கப்போறோம். இந்த படம் last Christmas festival-க்காக 22nd December, 2023 release ஆகியிருக்கு. இது ஒரு romantic comedy genre படம். இந்த படம் William Shakespeare உடைய Much Ado About Nothing-ன்ற comedy play-வ adapt பண்ணி எடுத்துருக்காங்க. இந்த படத்துல Sydney Sweeney and Glen Powell முக்கிய கதாப்பாத்திரங்கள்ல நடிச்சு இருக்காங்க. இவங்கள தவிர supporting roles-ல Alexandra Shipp, GaTa, Hadley Robinson, Michelle Hurd, Dermot Mulroney, Darren Barnet, Bryan Brown, Rachel Griffiths ஆகியோர் நடிச்சு இருக்காங்க. இந்த படத்துக்கு Danny Ruhlmann cinematography பண்ணியிருக்காரு. Editing Tia Nolan, Music Este Haim & Chris Stacey பண்ணியிருக்காங்க. இந்த படத்த Ilana Wolpert உடன் இணைந்து எழுதி இயக்கியிருக்காரு director Will Gluck.
2010-கள்ல Hollywood-ல mid budget movies வர்றது எப்படி rare-ஆ இருந்துச்சோ அது மாதிரி romantic comedy genre அழிந்து வரும் genre ஆகிடுச்சு. அதுக்கப்புறம் 2018-ல இந்த படத்தோட ஹீரோ Glenn Powell, Zoey Deutch உடன் இணைந்து நடித்த “Set it Up” படம் இந்த genre-க்கு புத்துயிர் கொடுப்பதா இருந்துச்சு. அதுக்கப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு இந்த படம் வந்திருக்கு. இந்த படத்துல Charm, Wit, Swoony romance இருக்கு. அதை விட முக்கியமா lead actors-க்குள்ள star Chemistry இருக்கு. அது சமீபத்துல இந்த genre-ல வெளி வந்த மற்ற படங்கள்ல இல்லாம இருந்துச்சு.
இந்த படம் Shakespeare உடைய “Much Ado About Nothing” தழுவி எடுக்கப்பட்டு இருக்கு. Glen Powell, Ben-ன்ற கதாப்பாத்திரத்துல Goldman Sachs employee-ஆ நடிச்சு இருக்காரு. இவர் ஒரு நாள் Bea-ன்ற law student-அ சந்திக்குறாரு. இருவருக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு பகல் மற்றும் இரவு ஒன்னா spend பண்றாங்க. அடுத்த நாள் Ben வீட்ல எழுந்த Bea, Ben கிட்ட எதுவும் சொல்லாம போயிடுறாங்க. சொல்லாம வந்தது தப்புன்னு Ben கிட்ட தனக்கு இருக்கும் ஈரப்ப சொல்லலாம்ன்னு திரும்ப வரும் போது Ben தன்னோட நண்பன் கிட்ட Bea பத்தி தப்பா பேசுனத கேட்டுடுறாங்க.
அதன் பிறகு சில மாதங்கள் கழிச்சு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திச்சுக்குறாங்க. இந்த முறை இவங்க ரெண்டு பேரோட sisters ஒருத்தரை ஒருத்தர் date பண்றாங்க. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இவங்க wedding-க்கு Australia-ல Ben and Bea சந்திச்சுக்குறாங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள again பிரச்சனை வர்றதால இவங்க ரெண்டு பேரையும் ஒன்னா சேர்க்க wedding party plot போடுறாங்க. இவங்களும் சரின்னு சொல்லி அவங்க திட்டம் போட்ட மாதிரி ஒத்துமையா இருக்குறதா நடிக்க ஆரம்பிக்க கடைசியில இவங்களுக்குள்ள உண்மையான காதல் மலருது. இது தான் இந்த படத்தோட கதை.
இந்த படத்தோட director Will Gluck உடைய முந்தைய படமான “The Scarlet Letter” இதுலயும் ஒரு classic story நிகழ் கால characters and themes மூலமா உயிர் கொடுக்கப்படுது. Ben தன்ன சுத்தி ஒரு emotional wall built பண்ணி வாழ்ந்துட்டு இருக்கான். Bea ஒரு நல்ல பொண்ணு. இவளுக்காக இவ parents பாத்து வச்ச வாழ்க்கையா தாண்டி போக பயப்படுற ஒரு பொண்ணு. இவங்க ரெண்டு பேரும் இவங்க வாழ்க்கையில எல்லார் கூடையும் பேசுறாங்க. ஆனா உண்மையா communicate பண்ணிக்குறது கிடையாது. இவங்க ரெண்டு பேரு கதாப்பாத்திரத்துக்குள்ளும் இருக்குற chemistry ரொம்ப நல்லாவே work ஆகியிருக்கு. படத்துல நிறைய wacky moments இருந்தாலும் Ben and Bea ஒருவரை ஒருவர் உண்மையாக பார்த்துக்கொள்ளும் சிறந்த தருணங்களும் இருக்கு. இந்த படத்தோட இன்னொரு பலம் director use பண்ணியிருக்குற creative visual ways in a Adult comedy film. ஒருத்தர நாம விரும்புறோம்னா அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கணும் நாம அவங்க வாழ்க்கையில இருந்தாலும் இல்லைனாலும்ன்றத ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க. கண்டிப்பா இந்த படத்த பாக்கலாம்.
இந்த review உங்களுக்கு பிடிச்சு இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, இந்த channel-அ subscribe பண்ணுங்க. மீண்டும் உங்களை அடுத்து வேறொரு படத்தோட review உடன் சந்திக்கிறேன். Bye!!
No comments:
Post a Comment