"*தூக்குதுரை" நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது*.
இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு தங்கள் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து வெற்றி படமாக்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த திரைப்படத்தை வாங்கி தமிழ்நாடு திரையரங்குகள் அனைத்திலும் வெளியிட்ட உத்திரா ப்ரொடக்ஷன்ஸ் கூறுகையில், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகமாகிறது என்றும் வசூல் ரீதியாகவும் நாளுக்கு நாள் அதிகமாகிறது என்றும் கூறினார். மேலும் இதுபோன்று குடும்பமாக பார்க்கும் நல்ல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் மென்மேலும் வரவேண்டும் என்றும் கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளை பாண்டியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் தூக்குதுரை திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறேன், இது போன்ற சின்ன திரைப்படங்களுக்கு இன்னும் நிறைய திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், இது குடும்பமாக பெண்கள் குழந்தைகளோடு சென்று திரையரங்கில் கண்டு களிக்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம், பார்வையாளர்களை கவரும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கிறேன் என்றும் அதற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அடைகிறேன் என்றார்.
மொத்தமாக படக்குழுவினர் தமிழகமெங்கும் திரையிட்ட இடங்களில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதையும், நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகரித்து வருவதையும், மக்கள் கூட்டமாக குடும்பத்தோடு சென்று திரையரங்கில் திரைப்படத்தை கண்டு ரசிப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறோம் என்று நன்றி கூட்டம் நடத்தி தங்களது நன்றியை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment