Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Wednesday, 31 January 2024

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின்

 *நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்’ படத்தின் ‘பிகினிங் லுக்’ போஸ்டரை சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்!*



சூப்பர்ஸ்டார் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் வரவிருக்கும் படமான ‘தி கோட் லைஃப்’ படத்தின் அடுத்தடுத்தப் போஸ்டர்களை இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் வெளியிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடிகர் பிரபாஸ் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் நடிகர் ரன்வீர் சிங் ‘தி லுக் பிஃபோர்’ என இரண்டாவது பார்வை போஸ்டரையும் பகிர்ந்த நிலையில், இப்போது நடிகர் துல்கர் சல்மான், பிருத்விராஜின் படத்தில் இருந்து ‘பிகினிங் லுக்’ போஸ்டரை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியிடப்பட்ட தீவிரமான போஸ்டர்களுக்கு முற்றிலும் மாறாக, இந்த தோற்றம் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிருத்விராஜின் ’தி கோட் லைஃப்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் புத்துணர்ச்சியூட்டுவதாகவும், பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையிலும் வசீகரம் நிறைந்ததாகவும் உள்ளது. 


விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதை சொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். 


இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் ஏப்ரல் 10, 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.


*விஷுவல் ரொமான்ஸ் பற்றி:*


விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது. இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது சினிமா மீது விஷுவல் ரொமான்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இயக்குநர் பிளெஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார். ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸி பெற்றுள்ளார். பிளெஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.

No comments:

Post a Comment