Featured post

Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy

 Mano sings in D Imman's music for the first time in 'Eleven', a racy investigative thriller produced in Tamil and Telugu by AR ...

Saturday 20 January 2024

கயல் ஆனந்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர்

 *கயல் ஆனந்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி திடீர் விஜயம்!*




பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாகவும் விஜித், கயல் ஆனந்தியின் ஜோடியாக  நடித்துள்ளார்கள்.  இவர்களுடன் புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அப்போது அங்கு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த இயக்குநர் சங்க மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். 


இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு ’மெட்ரோ’ படப்புகழ் ஜோகன் செவனேஷ் பாடல்களுக்கு இசையமைக்க, சுதர்ஷன் எம். குமார் பிண்ணனி இசை அமைக்கிறார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார். 


*நடிகர்கள்:* கயல் ஆனந்தி, ஆர்.கே. சுரேஷ், விஜித், ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இயக்குநர்: ராஜசேகர்,

தயாரிப்பாளர்: ரஞ்சனி,

தயாரிப்பு: பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ்,

பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, 

ஒளிப்பதிவு: இளையராஜா,

இசை: மெட்ரோ’ படப்புகழ் ஜோகன் செவனேஷ்,

பின்னணி இசை: சுதர்ஷன் எம். குமார்,

கலை: டி.என். கபிலன்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.

No comments:

Post a Comment