Featured post

Saara Movie Review

 Saara Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  sara  படத்தோட  review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது chellakutty. அதோட ...

Saturday, 4 May 2024

இப்படியும் சுத்தம் செய்யலாமா? கவனம் ஈர்க்கும் ரெஜினாவின் புதிய முயற்சி

 *இப்படியும் சுத்தம் செய்யலாமா? கவனம் ஈர்க்கும் ரெஜினாவின் புதிய முயற்சி*




*நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் பட்டையை கிளப்பும் ரெஜினா கசாண்ட்ரா* 

ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட்டார். 


சில தினங்களுக்கு முன்பு அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்டதோடு நேற்று நடந்த நிகழ்வில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவர் SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு கை கோர்த்திருந்தார். 


தனது சமூக பணி தொடர்பான அனுபவம் குறித்து பேசிய ரெஜினா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். அவர்களின் இந்த சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்த குழுவை வழிநடத்தும் அனிஷ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்.”


தொடர்ந்து பேசிய அவர், “கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.”


திரைத்துறையில் ரெஜினா தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் செக்ஷன் 108 படத்திலும் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment