Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Sunday, 16 February 2025

எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன்

 ”எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்” - நடிகர் யோகி பாபு விளக்கம்



தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருபவர் நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், யோகி பாபு சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலானது. மேலும், சில இணையதளம் மற்றும் சோசியல் மீடியாக்களில் இந்த தகவலை செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.


இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் யோகி பாபு, “எனக்கு எந்தவித விபத்தும் ஏற்படவில்லை, நான் நலமாக இருக்கிறேன். தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணிக்கவில்லை. ஆனால், நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயமடைந்ததாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது முற்றிலும் தவறு, என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த விசயம் அறிந்து என் நண்பர்கள், திரை பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். என் மீது அக்கறை கொண்ட அவர்கள் அனைவருக்கும் இந்த சமயத்தில் என் அன்பு கலந்த  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.



https://x.com/iYogiBabu/status/1890982466212565066?t=0pBCTcgjBiehSUOwDgquTA&s=19

No comments:

Post a Comment