Featured post

KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் (Vishnu Vishal Studios )

 **'KJB டாக்கீஸ் தயாரிக்கும்  ஹாட் ஸ்பாட் 2much படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் (Vishnu Vishal Studios ) நிறுவனம் வழங்குவதை பெருமிதமாக...

Thursday, 20 February 2025

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இருந்து சிலம்பரசன் டிஆர் பாடிய

 *நடிகர் ஹரிஷ் கல்யாணின்  ‘டீசல்’ படத்தில் இருந்து சிலம்பரசன் டிஆர் பாடிய இரண்டாவது சிங்கிள் ‘தில்லுபரு ஆஜா’ வெளியாகியுள்ளது!* 




நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் சிங்கிளான 'பீர் சாங்' தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்கள் மற்றும் சர்வதேச ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது. இந்த பாடல் சமூக ஊடக தளங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒன்று. இப்போது, 'டீசல்' படக்குழு  அடுத்தப் பாடலான 'தில்லுபரு ஆஜா' மூலம் ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிலம்பரசன் டிஆர் தனது சிக்னேச்சர் ஸ்டைலில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் எனர்ஜிடிக்  இசையமைப்பில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஹரிஷ் கல்யாணின் எனர்ஜிடிக் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஸ்வேதா மோகனின் ஈர்க்கும் குரல் நடிகை அதுல்யா ரவியின் திரை இருப்புக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்தப் பாடலுக்கு மேலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் குழந்தைகள் மற்றும் கோரஸ் பாடகர்களின் குரல் அமைந்துள்ளது.


ஒவ்வொரு பாடலிலும் தனித்துவமான பாணியை வெளிப்படுத்தி வரும் ஷோபி மாஸ்டர், இந்தப் பாடலிலும் சிறந்த நடனத்தைக் கொடுத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான இந்த இரண்டு பாடல்களுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், படத்தின் டீசர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கிய 'டீசல்’ படம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தேவராஜுலு மார்க்கண்டேயன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எம்.எஸ் பிரபு மற்றும் ரிச்சர்ட் எம் நாதன் ஆகியோர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும் ஸ்டண்ட் செல்வா & ராஜசேகர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபியும் செய்திருக்கின்றனர். புரொடக்‌ஷன் பை எஸ்பி சினிமாஸ்.


*நடிகர்கள்:* ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை மற்றும் கேபிஒய் தீனா.

 

 *தொழில்நுட்ப குழு:*


தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்கேர்குரோ, 

நடனம்: ஷோபி (தில்லுபரு ஆஜா), ராஜுசுந்தரம், ஷெரிப், ஆடை வடிவமைப்பாளர்கள்: பிரவீன் ராஜா, ஹர்ஷா சலபள்ளி, ஸ்வப்னா, 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வி. கிஷோர் குமார், 

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-அப்துல் நாசர்.

No comments:

Post a Comment