Featured post

Kuttram Pudhidhu Movie Review

Kuttram Pudhidhu Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kuttram pudhidhu  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். நோவா ஆம்ஸ்ட்ராங் தான் இந...

Monday, 24 February 2025

லெவன்' படத்திற்காக டி. இமான் இசையில் ஆண்ட்ரியா பாடி, ஆடி அசத்தும் 'தமுகு' பாடல்*

லெவன்' படத்திற்காக டி. இமான் இசையில் ஆண்ட்ரியா பாடி, ஆடி அசத்தும் 'தமுகு' பாடல்*








*தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவான பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது*


*Song Link: https://youtu.be/1zoMIAVxQbk*


ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. இப்படத்திற்காக 'தமுகு' எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


பாடலை பற்றி பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "பரபரப்பான கிரைம் திரில்லரான 'லெவன்' படத்தின் கதைக்கேற்றவாறு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழ் மற்றும் தெலுங்கு வரிகளைக் கொண்டு பாடலை உருவாக்கியுள்ளோம். இதன் காரணமாகவே இதற்கு தமுகு என்று பெயரிட்டுள்ளோம்," என்றார். கோடை விடுமுறையின் போது 'லெவன்' படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான 'லெவன்' படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக‌ ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்துள்ளனர். இயக்குநர் சுந்தர் சி யிடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். 


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். 'சரபம்', 'சிவப்பு', 'பிரம்மன்','ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மற்றும் 'கேம் சேஞ்ச‌ர்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 


இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். படத்தொகுப்பை தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. கையாண்டுள்ளார். 'லெவன்' திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக 'லெவன்' அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்," என்று கூறினார். 


ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படமான 'லெவன்' வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். 


*


*

No comments:

Post a Comment