Featured post

The World of Vada Chennai Expands: Vetri Maaran – Silambarasan TR – V Creations’ Much-Anticipated Arasan Begins Shoot in Kovilpatti

 *The World of Vada Chennai Expands: Vetri Maaran – Silambarasan TR – V Creations’ Much-Anticipated Arasan Begins Shoot in Kovilpatti* The h...

Thursday, 27 February 2025

புத்தம் புது பொலிவுடன் திரையினை அலங்கரிக்க வருகிறது ப்ளாக்பஸ்டர்

 *புத்தம் புது பொலிவுடன் திரையினை அலங்கரிக்க வருகிறது ப்ளாக்பஸ்டர்* *“ஜெயம்” மற்றும் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” திரைப்படங்கள் !!* 



















தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் திரைத்துறையில் 20 வருடங்களைக் கடந்திருக்கிறார். இதனைக் கொண்டாடும் வகையில் அவர் அறிமுகமான ஜெயம் படமும், பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” படமும் மீண்டும் புதுப்பொலிவுடன்  விரைவில் வெளியாகவுள்ளது. 

  

எடிட்டர் மோகன் தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில், 2003 ஆம் வருடம் ரவி மோகனை திரைக்கு அறிமுகப்படுத்திய படம் ஜெயம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து திரையுலகில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதர்கடுத்த ஆண்டு 2004 ல் இதே கூட்டணியில் வெளியான    

“எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி”  படமும் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமான இப்படத்தை தியேட்டர்களில் மக்கள் கொடுத்த ஆர்பாட்ட ரியாக்‌ஷன் மறக்க முடியாதது. இந்த வெற்றி 

ரவிமோகன்-மோகன்ராஜா இருவர் காம்பினேஷனுக்கும் இன்றைக்கும் பெரும் வரவேற்ப்புள்ளது. 


இந்த இரண்டு திரைப்படங்களும், புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. 

நவீன உயர்தர 4K டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், 

5.1 அட்மாஸ் சவுண்ட் அமைப்பில், இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


- Johnson PRO

No comments:

Post a Comment