Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Monday, 17 February 2025

தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான 'மக்கள் செல்வன்

 *தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் - லிங்குசாமி - சீனு ராமசாமி-  கௌதம் வாசுதேவ் மேனன்-  சுசீந்திரன்- மற்றும் பலர் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் முன்னோட்டம் வெளியீட்டனர்..*





*நடிகர் அப்புக்குட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* 


*பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரைப்படம்.*


தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.


இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் - லிங்குசாமி - சீனு ராமசாமி-  கௌதம் வாசுதேவ் மேனன்-  சுசீந்திரன்-  நட்டி என்கிற நட்ராஜ் - பிரேம்ஜி-  மற்றும் முன்னணி நட்சத்திர நடிகைகள் ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.



ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ராஜு சந்ரா இயக்கத்தில்எதிர்வரும் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் உருவாகியுள்ள 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் ' எனும் திரைப்படத்தில் அப்பு குட்டி , ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா அனில் குமார், ரோஜி மேத்யூ, சந்தோஷ் சுவாமிநாதன், ஈஸ்வரி, லீலாவதி கருணாகரன், விஷ்ணு, வேல்முருகன், ருக்மணி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜு சந்ரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி கே வி- நவ்னீத் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.  படத்தொகுப்பு பணிகளை தாஹிர் ஹம்சா மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத்குமார் கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியில் யதார்த்தமான 


 படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் மற்றும் மாதன்ஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரோஜி மேத்யூ மற்றும் ராஜூ சந்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.



படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' குடி பழக்கத்திற்கு அடிமையான எளிய கிராமத்து மக்களின் வாழ்வியல் தொடர்பான சம்பவங்களை தழுவி இப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஜனரஞ்சகமாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' தயாராகி இருக்கிறது'' என்றார்.



எதிர்வரும் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், பாடலும் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment