உலக சாதனையை நேரடியாக பங்கேற்று அங்கீகரித்த கின்னஸ் குழு
சிறப்புமிக்க தற்காப்புக் கலையை நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டுசேர்த்து, ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை நம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் ஒரு மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சியை கடந்த 8ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
உலக கராத்தே வரலாற்றில் முதல் முறையாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் நடுவர்கள் இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்று அதை அங்கீகரித்ததோடு மட்டுமல்லாமல், 21ஆம் தேதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் இணையதளத்திலும் இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த உலக சாதனை நிகழ்ச்சியில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றனர். அவர்களில் 2,996 பேர் சிறப்பாகச் செயல்பட்டதை உறுதி செய்து, கின்னஸ் உலக சாதனை புத்தகம் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
No comments:
Post a Comment