ஏவரெஸ்ட் சிகரம் எட்டிய வேலம்மாளியன் ஆஷிஷ் வேலம்மாள் நெக்ஸஸ் சிறப்பாக கௌரவித்து – 40 லட்சம் ரொக்க பரிசு வழங்கியது
வேலம்மாள் நெக்ஸஸ் அமைப்பின் சார்பில், ஏவரெஸ்ட் சிகரம் வெற்றிகரமாக ஏறிய மாணவர் ஆஷிஷ் அவர்களை, மிகச் சிறப்பான நிகழ்ச்சியில் கௌரவித்தது.
இந்த விழாவில், இந்தியாவின் இளைய சதுரங்க திலகமாக வலம் வருகிற கிராண்ட்மாஸ்டர் குகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேலம்மாள் நெக்ஸஸ் துணை நிர்வாகி திரு. ஸ்ரீராம் வேல்மோகன் , குகேஷ் முன்னிலையில் ஆஷிஷ்க்கு ₹40 லட்சம் மதிப்புள்ள ரொக்க பரிசை வழங்கினார்.
ஆஷிஷ் மற்றும் குகேஷ் இருவரும் வெலம்மாள் ஹாலுக்கு பிரமாண்டமான வரவேற்புடன் நுழைந்து, பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர்களுக்கு இடையில் சில புதுமையான மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்பட்டு, அவர்களின் திறன்கள் மற்றும் நகைச்சுவையை வெளிப்படுத்தும் தருணங்கள் நிகழ்ந்தன.
மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணமாக, ஆஷிஷின் தந்தையின் குரலுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ வெளியிடப்பட்டது. அந்த உருக்கமான காணொளி, மக்களின் மனங்களைத் தொட்டது.
வேலம்மாள் நெக்ஸஸ், இளைஞர்களின் திறமைகளை எப்போதும் முன்னிறுத்தும் ஒரு அமைப்பாக, இன்னும் பல உயரங்களை நோக்கி வழிகாட்டுகிறது.
No comments:
Post a Comment