Featured post

Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading

 Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading entertainment technology industry event, in pa...

Saturday, 2 August 2025

நடிகர் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் 'கிராண்ட் ஃபாதர் ' ( GRAND FATHER) படத்தின் டைட்டில்

 *நடிகர் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் 'கிராண்ட் ஃபாதர் ' ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*



*குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கிராண்ட் ஃபாதர் ' படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*


சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.


நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ' கிராண்ட் ஃபாதர்' ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்று, காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'பார்க்கிங்' எனும்  திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரை கௌரவிக்கும் வகையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் எம். எஸ். பாஸ்கரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment