Housemates Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம housemates ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை rajavel இயக்கி இருக்காரு. இவரு இயக்குற முதல் படமும் இதுதான். சிவகார்த்திகேயனும், vijayaprakash யும் சேந்து தயாரிச்சிருக்காங்க. இந்த படத்துல dharshan , aarsha chandhini , kalivenkat , vinodhini vaidyanathan னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் aug 1 ஆம் தேதி தான் release ஆகுது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
Housemates Movie Video Review: https://www.youtube.com/watch?v=67hMVb0qTAk
dharshan ஒரு mechanical engineering படிப்பை முடிச்சிட்டு ஒரு robotics company ல வேலை பாத்துட்டு இருக்காரு. இவருக்கு girlfriend அ இருக்காங்க aarsha chandhini. aarsha ஓட parents இவங்களோட love க்கு ஒத்துக்க மாட்டாங்க, அதுனால தன்னோட parents ஓட எதிர்ப்பை தாண்டி dharshan அ கல்யாணம் பண்ணிக்கறாங்க. இவங்க ரெண்டு பேரும் சேந்து ஒரு loan போட்டு வீட்டை வாங்குறாங்க. அந்த புது வீட்ல இவங்களோட வாழக்கையை தொடங்குறாங்க. இப்படி smooth அ போயிடு இருக்க இவங்க வீட்ல தான் ஒரு பெரிய சம்பவம் நடக்குது. அது என்னனா இவங்க வீட்டுக்குள்ள பேய் வந்துடுது. இன்னொரு பக்கம் இதே வீட்ல kaalivenkat யும் அவரோட குடும்பமும் வாழ்ந்துட்டு இருக்காங்க. இவங்களும் இதே மாதிரி supernatural விஷயங்களை feel பண்ணுறாங்க. என்னதான் இவங்க ரெண்டு பேரும் வேற வேற time period ல இருந்தாலும் ஒரே வீட்ல இருக்காங்க அப்புறம் தான் time collision ன்ற விஷயத்தை காமிக்கறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்தோட ஆரம்பம் ஒரு சாதாரண romance theme அ இருந்தாலும் கதை போக போக horror ஆவும் அப்புறம் fantasy ஆவும் கொண்டு வந்த விதம் ரொம்ப அழகா இருந்தது. இந்த transition அ பாக்குறதுக்கு அவ்ளோ interesting அ audience க்கு இருக்குமன்றத்துல எந்த ஒரு சந்தேகமும் இல்ல. படத்தோட first half ல audience அ guess பண்ண வைக்கிற மாதிரி நெறய twist அ வச்சிருக்காங்க. தேவையில்லாத scenes ஓ இல்லனா subplots னு எதுமே கிடையாது. அப்படியே interval ல ஒரு twist அ வச்சு second half க்கு lead குடுத்து முடிக்கிற first half portion அவ்ளோ super அ இருந்தது. interval க்கு அப்புறம் தான் time bending ஓட விஷயங்களை பத்தி சொல்ல ஆரம்பிக்குறாங்க. இந்த explanation எல்லாமே clear ஆவும் புரிர மாதிரியும் இருந்தது. முக்கியமா iron box அப்புறம் ceiling fan அ வச்சு ரெண்டு scene வரும். இதெல்லாம் பாக்கவே பயமா இருக்கும்.
kaalivenkat madras matinee படத்துக்கு அப்புறம் ஒரு தரமான performance அ குடுத்திருக்காரு னே சொல்லலாம். emotional scenes அ இருக்கட்டும் comedy scenes அ இருக்கட்டும் ரெண்டுத்துளையுமே செமயா நடிச்சிருக்காரு. இவருக்கு wife அ நடிச்சிருக்காங்க vinodhini vaidhiyanathan . இவங்க ரெண்டு பேரோட chemistry யும் நல்லா இருந்தது. இந்த படத்துல வர emotional part க்கு இவங்க ரெண்டு பேரோட பங்களிப்பு அதிகம் னே சொல்லலாம். முக்கியமா climax ல இவங்க ரெண்டு பேரோட performance அவ்ளோ அழகா இருந்தது. dharshan அப்புறம் arsha வோட நடிப்பும் எதார்த்தமா இருந்தது.
இந்த படத்துல use பண்ணிருக்கற cgi எல்லாமே topnotch ல குடுத்திருக்காங்க. அதுவும் பேய் வர scenes அ இருக்கட்டும், அப்புறம் sound design இதெல்லாமே பக்கவா இருந்தது. இந்த மாதிரி ஒரு concept அ நம்ம english படங்கள் ல பாத்துருக்கோம், ஆனா இந்த மாதிரி ஒரு பெரிய concept கதையை நம்ம audience க்கு ஏத்த மாதிரி மாத்தி கொண்டு வந்த விதம் நல்ல இருந்தது. ரொம்ப scifi elements குள்ள போகாம emotional ஆவும் comedy ஆவும் எடுத்துட்டு போனது தான் இந்த படத்துக்கு பெரிய plus point அ அமைச்சிருக்கு.
fantasy, horror,sci-fi னு இதெல்லாத்தயுமே mix பண்ணி ஒரு fresh ஆனா கதையை தான் கொண்டு வந்திருக்காங்க இந்த படத்தோட team. ஒரு நல்ல unique ஆனா கதைக்களம் தான் இந்த housemates திரைப்படம். அதுனால கண்டிப்பா உங்க பேமிலி and friends ஓட சேந்து இந்த படத்தை theatre க்கு போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment