Featured post

'டியூட்' படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் "- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

 *"'டியூட்' படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் "- இய...

Thursday, 16 October 2025

Kambi Katna Kathai Movie Review

Kambi Katna Kathai Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம கம்பி கட்டுன கதை படத்தோட review அ தான் பாக்க போறோம். natty,  Singampuli, Java Sundaresan, Kothandan, Mukesh Ravi, Sairathi, Karthik Kannan, Shalini Sahu, Aishwarya, and Karate Karthi  னு நெறய பேர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படம் நாளைக்கு ரிலீஸ் ஆகா போது. RAJANATHAN PERIYASAMY தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. படத்தோட trailer அ பாக்கும் போது super அ இருந்தது. அதுவும் சதுரங்க வேட்டைல நட்டி எப்படி comedy ஆவும் அதே சமயம் மத்தவங்கள ஏமாத்துறதுல புலி  யா இருந்தாரோ அதே மாதிரி தான் இதுல இருக்காரு னு சொல்லலாம். அதுல இருந்து இந்த படத்தோட expectation மக்கள் கிட்ட கூடி இருக்கு.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



வெளிநாட்டுல இருந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரம் நம்ம india க்கு வருது. இந்த வைரம் ஏதோ ஒரு விதத்துல customs கிட்ட மாட்டிகிடுது ஆனா இதை பத்தி custom officers க்கு ஒண்ணுமே தெரியாது. இந்த வைரத்தை எப்படியாவுது customs க்கு தெரியாம வெளில எடுத்துட்டு வரணும் னு plan போடுறாரு police officer அ இருக்க karathe karthi . அப்போ தான் இந்த வேலைய natti பக்கவா முடிச்சு கொடுப்பாரு னு natti கிட்ட போய் help கேட்குறாரு karathe karthi . இந்த வைரத்தை திருடனத்துக்கு அப்புறம் எதுக்காக இவன்கிட்ட குடுக்கணும் னு யோசிச்ச natti இதை நம்மளே வச்சுப்போம் னு முடிவு எடுக்குறாரு. அதே மாதிரி அந்த வைரத்தை customs க்கு தெரியாம எடுத்துட்டு வந்து ஒரு தோட்டத்துல  மறச்சு வைக்குறாரு. இருந்தாலும் police இவரை arrest பண்ணிடுறாங்க, வைரத்தை பத்தி கேட்கும் போது அங்க எதுவுமே இல்ல னு சொல்லுறாரு, இருந்தாலும் customs officer ஓட வீட்ல இருந்து பணத்தை திருடினதுக்காக natti யா arrest  பண்ணி jail ல அடைக்கறாங்க. jail ல இருந்து  release ஆகுற natti வைரத்தை எடுக்கறதுக்காக அந்த தோட்டம் இருக்கற எடுத்துக்கு வராரு. ஆனா அங்க ஒரு துறவி க்காக ஒரு கோயில் அ கட்டிட்டு இருக்காங்க. அதுனால natti  யும் அங்க ஒரு துறவி யா மாறுவேஷம் போட்டுட்டு உள்ள போறாரு. கடைசில இவரு இந்த வைரத்தை எடுத்தாரா இல்லையா ன்றது தான்  இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு conartist அ இந்த படத்துல natti ஓட நடிப்பு அட்டகாசமா இருக்கு னு தான் சொல்லணும். ஏன்னா படத்தோட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா வெளிநாட்டுல வேலை வாங்கி தரேன் னு சொல்லி இவருக்கிட்ட வந்தவங்களுக்கு medical check up பண்ணனும்  ண்றதுக்காக நெறய பணம் வாங்கி மோசடி பண்ணுவாரு. கடைசில சாமியாரா மாறி ஒரு island அ சொந்தமா வாங்குறது னு இவரோட acting வேற level ல இருக்கும். அடுத்தது singampuli , இவரு அடிக்கற லூட்டி  எல்லாமே கண்டிப்பா audience அ சிரிக்க வைக்கும். இவரும் நட்டி யும் சேந்து வர scenes எல்லாமே super அ இருந்தது. mukeshravi ஓட scenes யும் நல்ல இருந்தது. villain  அ வர karathe  karthi அப்புறம் அந்த ஊர் ல இருக்கற mla  னு இவங்களோட portions  யும் நல்ல இருந்தது. படத்துல வர dialogues, கதை நகர விதம் னு எல்லாமே ரொம்ப interesting அ இருந்தது னு தான் சொல்லணும். இந்த படத்தோட budget ரொம்ப கம்மி தான் இருந்தாலும் visuals, எல்லாமே நல்ல இருந்தது. technical team னு பாக்கும் போது  rajnath க்கு இது முதல் படமா இருந்தாலும் starting ல இருந்து ending வரைக்கும் அவ்ளோ interesting அ எடுத்துட்டு போயிருக்காரு. முருகானந்தம் கதை எழுதுன விதமா இருக்கட்டும் dialogues அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்துக்கு பெரிய plus தான். jaisuresh ஓட cinematography யும் bright அ colourful அ இருந்தது. காசே தான் கடவுளடா, maharaja படத்துல இருந்து எடுத்துட்டு வந்த reference யும் ரசிக்க வைக்குது. 


மொத்தத்துல ஒரு அருமையான கலகலப்பான திரைப்படம் தான் இந்த கம்பி கட்டுன கதை. இந்த diwali க்கு கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து theatre ல இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment