*டிஸ்னியின் சிறந்த அனிமேஷன் படமாக 93% ராட்டன் டொமேட்டோஸ் மதிப்பெண்களுடன் 'ஜூடோபியா 2' திரைப்படம் உள்ளது!*
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் பில்லியன் டாலர் ஃபிரான்சிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீக்வலான 'ஜூடோபியா 2' திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ராட்டன் டொமேட்டோஸில் 93% விமர்சகர்களின் மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது மட்டுமல்லாது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டிஸ்னி அனிமேஷன் வெளியீட்டில் சிறந்த படமாகவும் மாறியுள்ளது.
இந்தியாவில் 'ஜூடோபியா' திரைப்படம் பல மொழிகளில் வெளியாக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் புத்திசாலித்தனமான, வேடிக்கையான மற்றும் உணர்ச்சிபூர்வமான கதை களத்திற்காக விமர்சன ரீதியாக பாராட்டுகள் பெற்று வருகிறது. படம் குழந்தைகளுக்காக மட்டுமல்ல, அதன் உள்ளடக்கம் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதையும் நிரூபித்துள்ளது.
நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் இணையவெளியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க, 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய அனிமேஷன் வெற்றிப் படங்களில் ஒன்றாக 'ஜூடோபியா' இருக்கும்.
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நவம்பர் 28 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடுகிறது.

No comments:
Post a Comment