Featured post

Revolver Rita Movie Review

Revolver Rita Movie Review hi மக்களே இன்னிக்கு நம்ம revolver rita படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  JK. Cha...

Friday, 28 November 2025

Revolver Rita Movie Review

Revolver Rita Movie Review

hi மக்களே இன்னிக்கு நம்ம revolver rita படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  JK. Chandru. இந்த படத்துல keerthy suresh, Radhika Sarathkumar, Sunil, Redin Kingsley, Mime Gopi, Sendrayan, Super Subbarayan னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். 



இந்த படத்தோட கதை pondicherry ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. rita வா நடிச்சிருக்க keerthy suresh ஒரு middle class family யா சேந்தவங்க. இவங்களுக்கு ரெண்டு தங்கச்சி அப்புறம் ஒரு அம்மா இருக்காங்க. இவங்களோட அம்மா தான் chellama வா நடிச்சிருக்க radhika .  rita ஓட அப்பாவான parthasarathy ஒரு land அ வாங்குறதுல பணத்தை ஏமாந்துருப்பாரு. அதுனால suicide பண்ணி இறந்து போய்டுறாரு. chellamma  தன்னோட பொண்ணுங்கள கஷ்டப்பட்டு தான் வளக்கறாங்க. ஒரு நாள் எதிர்பாராதவிதமா இவங்களோட வீட்டோட கதைவை ஒரு rowdy வந்து தட்டுவான். இவன் ரொம்ப குடிச்சிருப்பா வீட்டுக்குள்ள வந்து ரகளை பன்னாரம்பிக்கறான். பயத்துல chellama இவனை தெரியாம கொன்னுடறாங்க. நெறய பேர் வீட்டுக்கு வரவும் இவனோட body அ மறச்சு வைக்கிறாங்க. ஆனாலும் எப்படியோ ஒரு பெரிய criminal gang கிட்டயும் police கிட்டயும் மாட்டிக்கிறாங்க.  இந்த பிரச்சனைல இருந்து தன்னையும் தன்னோட குடும்பத்தையும் காப்பாத்த தைரியத்தோடு களம் எறங்குறாங்க rita. இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்தோட first half அ பாத்தீங்கன்னா rita character அ ரொம்ப detailed அ காமிச்சிருப்பாங்க. அதாவுது இவங்களோட life எப்படி போகும், இவங்க எவ்ளோ simple ஆனா person  னு காமிச்சிருப்பாங்க. ஆனா கதை போக போக rita ஒரு சாதாரண பொண்ணு கிடையாது intelligent ஆனா பொண்ணு னு தெரிய வரும். இவங்களோட mind ரொம்ப sharp அ வேலை செய்யும். இது ஒரு crime comedy படம் ண்றதுனால நெறய இடங்கள் ல comedy scenes யும் வச்சுருக்காங்க. அது எல்லாமே ரசிக்கிற விதமா தான் அமைச்சிருக்கு. பெரிய action sequences இல்லனாலும் audience ஓட கவனம் சிதறாத மாதிரி படத்தை ரொம்ப interesting அ கொண்டு போயிருக்காங்க. 


படத்தோட second half தான் இன்னும் super அ போகும். ஒரு பக்கம் comedy இன்னொரு பக்கம் சின்ன சின்ன action scenes னு படம் ரொம்ப விறுவிறுப்பா போகுது. முக்கியமா redinkingsley , ajayghosh வர comedy scenes எல்லாமே சிரிப்பலையா இருந்தது. படத்துல அதிகமான sentiments யும் கிடையாது அதேசமயம் villains யும் ரொம்ப மிரட்டலாவும் இருக்கமாட்டாங்க. இருந்தாலும் படம் full அ entertaining அ தான் இருக்கு. 


keerthy suresh ஓட acting இந்த படத்துல ultimate அ இருந்தது னு தான் சொல்லணும். ஆரம்பத்துல சாதாரண பொண்ண இருந்து கடைசில தன்னோட family க்கு ஒரு பிரச்சனை னு வரும்போது தைரியமான பொண்ண மாறுற அந்த transition அ ரொம்ப அழகா கொண்டு வந்திருக்காங்க. radhika ஓட performance , comedy எல்லாமே நல்ல இருந்தது. kingsley ஓட comedy timing யும் perfect அ இருந்தது. மத்த supporting actors ஆனா sunil, ajayghosh , sendrayan ஓட நடிப்பும் நல்ல இருந்தது. 


விறுவிறுப்பான கதைக்களம், comedy characters, னு ஒரு நல்ல crime comedy thiraipadam தான் இது. சோ miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment