பரபரப்பைக் கிளப்பிய சாவு வீடு பட ஃபர்ஸ்ட் லுக் !!
வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள கமர்ஷியல் படம் சாவு வீடு நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது !!
ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் “சாவு வீடு”. புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது.
இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்..,
ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன்.கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா
ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம் : ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ்
இசை : ட்யூனர்ஸ்
ஒளிப்பதிவு : பூபதி வெங்கடாசலம்
எடிட்டிங் : சுந்தர் S & ராகேஷ் லெனின்
கலை இயக்கம் : ராஜேஷ் கண்ணா முருகேஷ்
சவுண்ட் டிசைன் & மிக்ஸ் ஸ்டூடியோ : சவுண்ட் வைப்ஸ் ஸ்டூடியோஸ்
சவுண்ட் மிக்ஸ் : T. உதய் குமார்
சவுண்ட் டிசைன் : ரஞ்சித் வேணுகோபால் மற்றும் M. சரவணகுமார்
டிஐ & வி.எஃப்.எக்ஸ் ஸ்டூடியோ : ஐ-மாட் மீடியா
வி.எஃப்.எக்ஸ் : வெற்றி செல்வன்
வஸ்திர வடிவமைப்பு : பொன்னி R
மேக்கப் : ஐஸ்வர்யா
டைட்டில் டிசைன் : போவாஸ்
ஸ்டில்ஸ் : மார்டின்
பப்ளிசிட்டி டிசைன் : ஜின் ஸ்டூடியோஸ் / மோனிக்
புரடக்சன் மேனேஜர் : கே.என்.ஆர். சாமி
மக்கள் தொடர்பு : ஆர். மணி மதன்












No comments:
Post a Comment