Featured post

Yellow Movie Review

Yellow Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poorni...

Friday, 21 November 2025

Yellow Movie Review

Yellow Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yellow படத்தோட review அ தான் பாக்க போறோம். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poornima Ravi, Vaibhav Murugesan, Sai Prasanna, Leela Samson, Vinodhini Vaidhyanadhan, Prabu Soloman, Namita Krishnamoorthy, Vigneshwar, Loki, Ajay னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் 21st nov அன்னிக்கு release ஆயிருக்கு.   சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 


aadhirai யா நடிச்சிருக்க poornima ravi அவங்களோட higher studies யும் நல்ல salary இருக்கற job யும் விடணும் னு நினைக்கிறாங்க. இதுக்கு காரணம் இவங்களோட அப்பாவா நடிச்சிருக்க delhi ganesh க்கு சில health issues இருக்கிறது தான். இந்த பிரச்சனை போயிடு இருக்கும் போது இவங்களோட lover santhosh அ நடிச்சிருக்க sai prasanna ஓட சில கருத்து வேறுபாடு ஆலா breakup ஆயிடுது.  ஒரு பக்கம் ஒரே மாதிரி போயிடு இருக்கற bank job இன்னொரு பக்கம் family  ஓட responsibility னு சோந்து போயிருக்கிற aadhirai , திடுருனு ஒரு நாள் கேரளா க்கு trip பிளான் பண்ணி போறாங்க. அங்க போய் அவங்களோட school  friends அப்புறம் relatives அ பாத்து கொஞ்ச நாள் நல்ல jolly அ நாட்களை spend பண்ணனும் னு நினைக்கிறாங்க. அப்படி போகும் போது தான் jenny  அ நடிச்சிருக்க namitha krishnamoorthy அப்புறம் sai யா நடிச்சிருக்க vaibhav murugesan னு ரெண்டு பேரா சந்திக்கறாங்க aadhirai . இந்த journey ல இவங்களோட life ல என்னனலாம் சந்திக்க போறாங்க? kerala க்கு போறதுக்கான காரணம் நிறைவேறிச்ச இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


actors ஓட performance னு பாக்கும் போது poornima ravi ஓட acting super அ இருந்தது. இவங்க youtube channel ல ரொம்ப famous அதுமட்டும் இல்லை சில படங்கள் ல சின்ன சின்ன character ளையும் நடிச்சிருக்காங்க. ஒரு lead role அ  இது தான் இவங்களுக்கு முதல் படம். இதுல இவங்களோட bodylanguage அ இருக்கட்டும், emotions அ காமிக்க்ர விதமா இருக்கட்டும் dialogues அ இருக்கட்டும் எல்லாமே அழகா இருந்தது. heroine ஓட journey ல friend அ வர vaibhav murugesan ஓட acting யும் ரொம்ப genuine அ இருந்தது. நெறய audience க்கு இவரோட sai character ரொம்பவே பிடிக்கும். படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors heroine ஓட journey அங்க அங்க வந்துட்டு போனாலும் கதைக்கு importance அ தர characters அ தான் இருக்காங்க. 


இந்த படத்தோட technical team னு பாக்கும்போது, cinematography அ பத்தி சொல்லியே ஆகணும். heroine ஓட journey அ காமிச்சா விதமா இருக்கட்டும், heroine travel பண்ணுற இடங்கள் அதாவுது kerala, goa னு இது எல்லாமே ரொம்ப அழகா camera ல பதிவு பண்ணிருக்காரு abi adhvik. cliffy chris ஓட songs இந்த படத்துக்கு ரொம்ப அருமையா set யிருந்தது. anadh kasinath ஓட bgm இந்த படத்தை இன்னொரு level க்கு எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணும். ஒரு ரெண்டு பேரோட journey , அவங்களோட self discovery அப்புறம் personal growth க்கான தேடல் இதெல்லாமே ரொம்ப interesting அ இருக்கற மாதிரி edit பண்ணிருக்கற ஸ்ரீ வத்சன் ஓட editing யும்  அருமை தான். கதையை எழுதி இயக்கி இருக்கற ஹரி mahadevan யும் நெறய விஷயங்களா audience ஆழ connect பண்ணிக்கற மாதிரி நெறய gentle ஆனா moments குடுத்து ஒரு soulfull ஆனா படத்தை தான் குடுத்திருக்காரு. 


மொத்தத்துல நம்மோட மனச வருடுற மாதிரியான படம் தான் இந்த yellow. சோ மறக்காம இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment