Featured post

Theeyavar Kulai Nadunga

Theeyavar Kulai Nadunga Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம theeyavar kulai nadunga படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக...

Friday, 21 November 2025

Theeyavar Kulai Nadunga

Theeyavar Kulai Nadunga Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம theeyavar kulai nadunga படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dinesh Lakshmanan.   இதுல  Arjun, Aishwarya Rajesh, Anikha, Praveen Raj  னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



படத்தோட ஆரம்புதலையே ஒரு மர்மமான கொலை நடக்குது. writer jebanesan அ நடிச்சிருக்க logu npks அ ராத்திரி நேரத்துல ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு road ல வச்சு யாரோ கொலை பண்ணிடுறாங்க. கொலை பண்ணவன் தலை ல இருந்து கால் வரைக்கும் நல்ல cover பண்ணிருப்பா. அவன் helmet sunglass அப்புறம் black colour dress னு எல்லாத்தயும் போட்டு complete அ தன்னை cover பண்ணிருக்கான்.  இது ஒரு serial killer பண்ண வேலைய? jebanesan எதுக்காக அவரோட பொண்ணு கிட்ட அழுதுகிட்டு phone ல பேசுனாரு? இந்த கொலை எதுக்காக நடந்தது னு பல கேள்விகள் police department க்கு வருது.  


இப்போ அடுத்ததா inspector magudapathy  அ நடிச்சிருக்க arjun அ காமிக்கறாங்க. இவரு ஒரு tough ஆனா police officer . இவரை introduce பண்ணும்போதே hidden evidence ன்ற book படிச்சிட்டு இருப்பாரு அதுல இருந்து இவரோட பார்வை எவ்ளோ துல்லியமா இருக்கும் னு நம்ம புரிஞ்சுக்கலாம். இவரோட area ல இந்த கொலை நடந்த னால இந்த case  இவருகிட்ட வருது. இது ஒரு straightforward investigation அ இல்லாம நெறய thrilling ஆனா layers அ வச்சு ரொம்ப interesting அ இந்த கதையை கொண்டு போயிருக்காங்க. இந்த case அ investigate பண்ணும்போது தான் இன்னொரு interesting ஆனா lead கிடைக்குது. அது writer அ வேலை செய்யற jebanesan க்கும் construction company அ வச்சு நடத்துற ஒரு பெரிய பணக்காரர் ஆனா varadharajan அ நடிச்சிருக்க ramkumar ஓட ஒரு link இருக்கு. 


இப்போ பக்கம் ரெண்டு close friends அ காமிக்கறாங்க. அவங்க தான் adhi அப்புறம் rahul. adhi ஓட வேலை என்னனா snoring problem இருக்கற patients அ treat பண்ணுவான் அதுமட்டுமில்ல sleep therapy யும் practise பண்ணுவான். இவன் எங்க போனாலும் rahul யும் போவான். இப்போ அடுத்ததா meera வா நடிச்சிருக்க aishwarya rajesh அ காமிக்கறாங்க. adhi இவங்கள love பண்ணுவான். meera autism இருக்கற குழந்தைங்க படிக்கற school ல teacher அ வேலை பாப்பாங்க. இவங்களோட role  அ ரொம்ப complex  அ இருக்கும். அதே சமயம் jebanesan யும் ரொம்ப நல்லவரும் கிடையாது . இவங்க எல்லாருமே எப்படி connect  ஆகுறாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல வர கதை ஒரு உண்மையான சம்பவந்த base பண்ணி தான் எடுத்துருக்காங்க. ஊழல், குற்றம், morality  னு நெறய விஷயங்களை எடுத்து சொல்லுற விதமா இந்த படம் அமைச்சிருக்கு. இந்த படத்துல ஒரு சில இடங்கள் ரொம்ப slow போன மாதிரி ஒரு feel அ குடுக்குது. உதாரணத்துக்கு adhi அப்புறம் meera ஓட love track ரொம்ப boring அ இருக்கும். இதெல்லாம் கொஞ்சம் avoid பன்னிருந்த இந்த படம் இன்னும் நல்ல இருந்திருக்கும். 


performances னு பாக்கும்போது arjun அப்புறம் aishwarya rajes ஓட நடிப்பும் super அ இருந்தது. arjun investigate பண்ணுற விதமா இருக்கட்டும் aishwarya rajesh ஓட emotions அ வெளிக்காட்டுறத இருக்கட்டும் எல்லாம் perfect  அ இருந்தது. ஒரு சில sexual  violence scenes லாம் ரொம்ப அதிகமா காமிச்சிருப்பாங்க. இந்த கொஞ்சம் sensitive அ handle  பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். 


கதைக்களம், டிரெக்ஷன் னு எல்லாமே அட்டகாசமா இருக்கற படம் தான் இது. so உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment