Featured post

Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers*

 Icon Star Allu Arjun x Lokesh Kanagaraj: A Mammoth Project by Mythri Movie Makers* The monumental project featuring Icon Star Allu Arjun in...

Wednesday, 14 January 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)

 *ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!*



இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.


பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers)  நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas )  உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படம்  இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.


இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்கு தலைமையேற்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி ( Naveen Yerneni ) மற்றும் ரவி சங்கர் ஆகியோருடன் இணைந்து, பன்னி வாஸ் (Bunny Vas) இணைத் தயாரிப்பாளராகவும், நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர்.


அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து, படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கதையின் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான  கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.


AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில்  மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.

https://youtu.be/6hqduA_fUqE


No comments:

Post a Comment