Blast Tamil Movie Review, Ratings 4.5/5
ஹாய் friends இன்னிக்கு நம்ம blast படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல Arjun , Abhirami , Preity Mukhundhan , Arjun Chidambaram , Dileepan , Bala Hasan , John Kokken , Ramesh Narayanan , Pawan , Vivek Prasanna , S Rajapandi , Vinod Sagar னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது subash k raj . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
arjun , abhirami யும் husband and wife அ இருக்காங்க. இவங்களோட பொண்ணு தான் priety mukundan . arjun ஒரு சாதாரண கராத்தே master அ இருக்காரு, abhirami housewife அ இருக்காங்க. இவங்க என்ன தான் வெளில பாக்க சாதாரண குடும்பம் மாதிரி தெரிஞ்சாலும் சண்டை னு வந்துட்டே இவங்கள மிஞ்ச முடியாது. இதெல்லாம் நீங்க trailer லேயே பாத்திருப்பீங்க. அப்பாக்கும் பொண்ணுக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அது என்னனா ஊர் ல என்ன பிரச்சனை வந்தாலும் அதா முதல் ஆளா நின்னு தீத்து வைப்பாங்க. இதுனாலயே இவங்க family க்கு தேவையில்லாத problems வருது. சின்ன பொண்ணா இருந்துகிட்டு தேவையில்லாத பிரச்சனைல தலையிட கூடாது னு abirami , preity mukundan அ கண்டிக்கறாங்க. ஆனா கடைசில preity mukundan க்கே இப்போ ஒரு பிரச்சனை வருது, அப்புறம் எப்படி இவங்க சும்மா இருப்பாங்க. இதுனால arjun ஓட family க்கு ஒரு threat வருது, அதுமட்டுமில்ல villain க்கு தேவையான ஒரு விஷயம் இவங்ககிட்ட மாட்டிக்குது. இப்போ villain gang இவங்கள அடிச்சுப்போட்டு ஜெயிச்சாங்களா இல்ல இந்த குடும்பத்துக்கிட்ட மாட்டிகிட்டு முழிச்சாங்களா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்தை direct பண்ணின director க்கு இது தான் முதல் படம். முதல் படத்துலயே ஒரு interesting ஆனா கதைக்களத்தை தான் குடுத்திருக்காரு. ஒரு பக்கம் விறுவிறுப்பா போகுது அதே சமயம் emotional அ ஒரு அழுத்தமான message யும் சொல்லுறாங்க. வெறும் action scenes மட்டும் இல்லாம இந்த காலத்துல சக மனிதர்கள் என்ன பண்ணுறாங்க பிரச்சனையா பாத்து ன்றதையும் இந்த படத்துல காமிச்சிருக்காங்க.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது action king arjun க்கு இது ஒரு நல்ல comeback movie யா அமைச்சிருக்கு. action scenes அ இருக்கட்டும், dialogue delivery அ இருக்கட்டும், எல்லாமே பாக்க fantastic அ இருந்தது. preity mukundan ஓட action sequences எல்லாமே mass அ இருந்தது. villain gang ல இருக்கறவங்கள 6 அடி இருப்பாங்க. அவங்க எல்லாரையும் அசால்ட்டா போட்டு அடிக்கிறாங்க. அதுவும் முக்கியமா interval scene க்கு முன்னாடி இவங்க பண்ணுற fight scene க்கு விசில் பறக்குது audience கிட்ட இருந்து. abhirami அம்மாவா தன்னோட பொண்ணு மேல பாசம் வைக்கிறதா இருக்கட்டும். villains கிட்ட fight பண்ணுறதா இருக்கட்டும் எல்லாமே super அ இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு அருமையா perform பண்ணிருக்காங்க.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது stunt master pheonix prabhu வை பத்தி சொல்லியே ஆகணும். ஏன்னா ஓவுவுறு action scenes யும் அவ்ளோ கச்சிதமா cherograph பண்ணிருக்காரு. வீட்டுக்குள்ள நடக்கற சண்டை scenes அ இருக்கட்டும் வெளில நடக்கற சண்டை scenes அ இருக்கட்டும் எல்லாமே ரசிக்கிற விதமா விசில் பறக்கிற moments அ அமைச்சிருந்தது. என்னதான் karate related அ நெறய தமிழ் படங்கள் வந்தாலும் இந்த படம் கொஞ்சம் தனித்துவுமா தெரியுது னு தான் சொல்லணும். arun radhakrishnan ஓட cinematography அப்புறம் pradeep e raghav ஓட editing எல்லாமே பக்காவா இந்த படத்துக்கு அமைச்சிருக்கு. ravi basurur ஓட music அ பத்தி சொல்லவா வேணும். action scenes க்கு லாம் bgm அ தெறிக்க விட்டிருக்காரு. அதே மாதிரி ஒரு கிராமத்தை காமிச்சிருப்பாங்க. அந்த scene க்கு வர bgm ரொம்ப soulful அ இருந்தது.
ஒரு mass ஆனா தெறிக்க விடுற commercial படம் தான் இது. சோ miss பண்ணாம உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாத்துட்டு வாங்க.

No comments:
Post a Comment