Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Wednesday, 9 August 2023

பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன்

 பான் இந்தியா படம் இயக்கும் ஆக்ஷன்கிங் அர்ஜுன்.

ஹைதராபாத்தில் இன்று முதல் படப்பிடிப்பு துவங்கியது.


ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15 வது படத்தை அவரே கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.






தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார்.


கன்னட சினிமாவில் பிரபல நடிகரான உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக  அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். மற்றும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க இவர்களுடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.


ஒளிப்பதிவு - பாலமுருகன்.

உலகமுழுக்க பிரபலமான கே. ஜி. எப் படத்தின் இசையமைப்பாளர்  ஹித்தேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.


கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அர்ஜுன்.


படப்பிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் துவங்கியது.


சத்யராஜ் மற்றும் நாயகன் நிரஞ்சன், நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.


மக்கள் தொடர்பு

மதுரை செல்வம்.

மணவை புவன்.

No comments:

Post a Comment