Featured post

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”* 
*SJ Suryah Directorial-Starrer “Killer”* 
*Shooting Starts with Ritu...

Wednesday, 5 September 2018

Like Pannunga Share Pannunga Movie News

புதுமுகங்கள் ஆச்சு-பிரிஷா நடிக்கும்

  "லைக் பண்ணுங்க  ஷேர் பண்ணுங்க"

காமெடி படத்தை இயக்குகிறார் புதியவர் 
சு.சத்தியசீலன்.

 



 



 



 



 



 



 



 



 



 









 




 


 


 


 






 














 



அண்ணாமலை தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.சரவணன்

தயாரிக்கும் படத்திற்கு " லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க " என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால்,கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  - பாலா
இசை மற்றும்  பாடல்கள் -   செளந்தர்யன்
கலை  -    தேவராஜ்
எடிட்டிங்  -    கோபிகிருஷ்ணா.
தயாரிப்பு மேற்பார்வை  -    சாட்டை N.சண்முகசுந்தரம்,  j.பாரதிராஜா

தயாரிப்பு.அருணாசலம் தியேட்டர்ஸ் A.சரவணன்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சு.சத்தியசீலன்.

படம் பற்றி படத்தின் இயக்குனர் சு.சத்தியசீலனிடம் கேட்டோம்...
இது முழுக்க முழுக்க  பேமிலி காமெடி சப்ஜெக்ட்.
இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பது தான் எங்களது நோக்கம்.

தயாரிப்பாளர் சரவணன் அவர்கள் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்....தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள் ..என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள்.. என்ன மாதிரியான படத்திற்கு மக்கள்  கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது அத்துப்படி.

அப்படிப்பட்ட சரவணன் தேர்ந்தெடுத்த கதை தான் இந்த லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கதை.  அந்த குடும்பத்தை பார்ப்பதே தப்பு என்று இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிற பகை...

அப்படிப்பட்ட இரண்டு  குடும்பத்தை சேர்ந்த பையனும் பெண்ணும் காதலித்தால் என்ன ஆகும். முந்தைய தலைமுறை மோதிக் கொள்ளஅடுத்த தலைமுறை காதல் கொள்வது என்பது எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்பது தான் திரைக்கதை.

படப்பிடிப்பு முழுவதும் ஈரோடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் நடைபெற்றுள்ளது.

இது பக்கா கமர்சியல் படமாக உருவாகி உள்ளது என்றார் இயக்குனர் சு.சத்தியசீலன்.

No comments:

Post a Comment