Featured post

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு*

 *நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு* முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44...

Wednesday 5 September 2018

Jithen Ramesh New Movie

அதிரடி வில்லனாக ஜித்தன் ரமேஷ் நடிக்கிறார்



யஷ்வந்த் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரவி செளத்ரி நாகார்ஜுனா தயாரிக்கும் பிரமாண்டமான படத்தில் ஜித்தன் ரமேஷ் அதிரடி வில்லனாக நடிக்கிறார்... ஜித்தன் மதுரைவீரன்




புலி வருது நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ்...நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார்அதுவும் பக்கா வில்லனாக நடிக்கிறார்.
படத்திற்கு இன்னும் பெயரிடப்பட வில்லை.








கதாநாயகனாக சாய் நடிக்கிறார்.
கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார்.

மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாக வில்லை...
இன்று சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.

ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப் பாடுவது மாதிரியான பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது..





ஒளிப்பதிவு   -     ரவி 
இசை   -    ஆனந்த்
எடிட்டிங்   -    ஹரி
நடனம்   -   பிரேம் ரக்‌ஷித்
சண்டை பயிற்சி   -    டிராகன் பிரகாஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -   R.ரமேஷ்,ராம்பிரபு
எழுதி இயக்குபவர் -   வம்சி கிருஷ்ணா மல்லா...இவர் இயக்கும் முதல் படம் இது.

தயாரிப்பு   -    ரவி செளத்ரிநாகார்ஜுனா
வேகமாக வளர உள்ள இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு முழுவதும் கோவாவில் நடக்க உள்ளது.  கதாநாயகன் பொறுப்பிலிருந்து ஏன் வில்லனாக நடிக்கிறீர்கள் என்று ஜித்தன் ரமேஷிடம் கேட்டோம்

படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன் இயக்குனர்  கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.







சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா வில்லனா ?
அது மாதிரி தான் என் காரக்டரை சொல்லனும்னா "ஹை வோல்டேஜ் வில்லன்" என்று சொல்லலாம் என்றார் ஜித்தன் ரமேஷ்.

No comments:

Post a Comment