Featured post

Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India

 Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India* Presented by Zee Studios in association with MIG P...

Tuesday, 7 January 2020

சோழிய வேளாளர் நல சங்கம் சார்பில் இரட்டையர்களுக்கு பாராட்டு

சோழிய வேளாளர் நல சங்கம் சார்பில் இரட்டையர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள்முதன்முதலாக 9 வயதுக்குள்  கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து பல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர் .



முதல்வர்   மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற  காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் ( Good Shepherd English School ) 5ம் வகுப்பு பயிலும்  இரட்டையர்களான கே.ஸ்ரீவிசாகன் ( srivishakan) வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி ( sriharini ) வயது 9  இவர்களை சிறப்பிக்கும் விதமாக பள்ளித் தாளாளர் ரான்சன் தாமஸ் முதல்வர் ஜாய் தாமஸ் ஆகியோர் இவர்களின் பல்வேறு சாதனைகளை பள்ளியின் சார்பாக  புத்தகமாக தயார்செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் கைகளால் வெளியிட்டனர் மேலும் இவர்கள்  சாதனைக்கு  மகுடம் சேர்க்கும் விதமாக 05.01.2020 அன்று காரைக்காலில் காரை மாவட்ட சோழிய வேளாளர் நல சங்கம் சார்பில் மங்கல சந்திப்பு விழாவில் சங்க  மாநில பொதுச்செயலாளர் மைதீன் கோவிந்தராஜன் அவர்களால் சாதனை குழந்தைகள் என்ற விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார் உடன் மாவட்ட தலைவர் சின்னையன்  மாவட்ட பொதுச்செயலாளர் அமுதா ஆறுமுகம்  மாஸ்டர் வி ஆர் எஸ் குமார் மற்றும் பலர் இருந்தனர் 

No comments:

Post a Comment