Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Thursday, 15 July 2021

திரு.ரஜினிகாந்த், திரு.கமல், திரு. விஜய்,

 திரு.ரஜினிகாந்த், திரு.கமல்,

திரு. விஜய்,

திரு. அஜித் , திரு. சூர்யா இப்படி பல உச்ச நடிகர்கள் அவர்களின் மார்கெட்டுக்கு  ஏற்றவாறு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு கோடிக்கணக்கில் வரி கட்டுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அந்த வரிப்பணம் எத்தனை திட்டங்களுக்கு உதவி இருக்கும்.  அந்த திட்டங்களால் எத்தனை மக்கள் பலனடைந்திருப்பார்கள்.

வரிக்காக இன்று விஜய் அவர்களை விமர்சிப்பவர்களும் அவர்களின் வரிப்பணத்தில் பலனடைந்திருக்கக்கூடும்.



இதுவரை திரு. விஜய் அவர்கள் கட்டிய வரிப்பணம் எத்தனை கோடி என்று அரசை அறிவிக்கச் சொல்லுங்கள்!

ஒரு பொருளின் விலையைவிட இரண்டு மடங்கு வரி விதிக்கும் போது யாருக்குத்தான் நெருடல் வராது. அது சட்டத்துக்கு உட்பட்டு இருக்கலாம். இறக்குமதி வரியை மட்டுமாவது ரத்து செய்யலாமே என்று அவர் நீதி மன்றத்தை அனுகியது என்ன தேசக்குற்றமா?

அரசு சொல்லும் வரி அனைத்தையும் கட்டித்தான் தீரவேண்டும் என்றால்

அப்ப GST எதிராக இங்கு பலர் பொங்குவது ஏன் ?

விஜய் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்,ரத்து செய்வதும் சட்டத்துக்குட்பட்டு நீதிபதி சொல்ல வேண்டிய தீர்ப்பு. சொல்லியும் விட்டார்.

அதைவிட பெரிய வேதனை இங்கே ஆளாளுக்கு நீதிபதிகளாய் ஏளனமாக விமர்சனம் செய்வது!

திரைப்படத்தில் ஹீரோ கெட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவார்.

நிஜத்திலும் அதே கதாநாயகன் கெட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினால் நீதி மன்றம் சும்மா விடுமா?

விஜய் அவர்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை.

வரி கூடுதலாக இருக்கிறதே என்று நீதிமன்றம் அனுகி இருக்கிறார்.

ஆளாளுக்கு கூச்சல் போடும் அளவுக்கு  அவர்மீதொன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன்!

No comments:

Post a Comment