Featured post

Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam

 Prime Video Announces the Global Premiere Date of its Tamil Original Suspense Drama Exam, Launching on May 15* From creative producers Push...

Thursday, 15 July 2021

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி

 நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் " முடக்கருத்தான் " 


கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் K .வீரபாபு அழைக்கப்பட்டு அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு மரணமின்றி குணப்படுத்தப்பட்டது . மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ருபாய் விலையில் அவர் உணவளித்து மக்களால்   போற்றப்பட்டார். 



தற்போது  K .வீரபாபு 'முடக்கருத்தான்' எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் . இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத்தொகுப்பினை ஆகாஷும் ,சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும்  மேற்கொள்கிறார்கள் .இந்த படத்தின் இதர கதாபாத்திர தேர்வுகள் நடைபெற்று விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது .


தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து -இயக்கம் - K .வீரபாபு

தயாரிப்பு - வயல் மூவிஸ் 

இணை இயக்குனர் - மகேஷ் பெரியசாமி 

ஒளிப்பதிவு -அருள் செல்வன்

இசை -சிற்பி 

தயாரிப்பு நிர்வாகம் - வேதா ரவி , ECR அன்பு 

பாடல்கள் -பழனி பாரதி 

படத்தொகுப்பு -ஆகாஷ் 

சண்டை பயிற்சி -சூப்பர் சுப்பராயன்

கலை இயக்கம் - பிரபஞ்சன் 

விளம்பர வடிவமைப்பு - ப்லெஸ்சன்

மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத்

No comments:

Post a Comment