Featured post

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event   Chennai, 5 December 202...

Saturday, 7 August 2021

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் TG தியாகராஜன்

 சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் TG தியாகராஜன் வழங்கும், தனுஷ் நடிக்கும் திரைப்படம் “மாறன்” ! 

தேசிய விருது நாயகன் தனுஷ் நடிப்பில், அடுத்து வெளிவரவுள்ள “மாறன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள்,  நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தங்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் “மாறன்”

தலைப்பை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேன், கதை களத்திலும், வித்தியாசாமான கதை சொல்லலிலும்,  ஸ்டைலீஷான மேக்கிங்கிலும் ரசிகர்களை அசத்தக்கூடியவர். அவர் படங்களுக்கு மட்டுமல்லாது அவர் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து  வருகிறது. இந்த முறை தமிழின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ் அவர்களுடன் அவர் கூட்டணி சேர்ந்திருப்பது ரசிகர்களிடம் வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு, அருசுவை விருந்தாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது. 


இப்படத்தினை இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்குகிறார்.  சத்யஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனத்தின் சார்பில்  TG தியாகராஜன் வழங்கும் இப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கிறார்கள். GV பிரகாஷ்குமார் இசையமைக்க, விவேகானந்தம் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்கிறார். புரடக்சன் டிசைனராக A.அமரன் பணியாற்ற, பிரசன்னா GK படத்தொகுப்பு செய்கிறார். மேம்பட்ட திரைக்கதை  வடிவத்தை விவேக், ஷர்ஃபூ, சுஹாஸ் செய்கின்றனர். விக்கி மற்றும் ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை அமைக்கின்றனர். காவ்யா ஶ்ரீராம் உடை வடிவமைப்பு செய்ய, ஜானி நடனம் அமைக்கிறார். ராஜ்குமார் ( ROCKY ) புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் செய்கிறார். புகைப்பட பணிகளை சுரேஷ் செய்ய, KG & சிவராம், ராமநாதன் ஆகியோர் துணை இயக்குநர்களாக  பணியாற்றுகின்றனர். B. ராஜா மேக்கப் செய்ய, செல்வம், தன்ராஜ் உடைகள் பணிகளை செய்கின்றனர். ஹரிஹரன் சுதன்  விஷுவல் எஃபெக்ட்ஸ் கவனிக்க, ரங்கா, மற்றும்  Igene கலரிஸ்ட் பணிகளை செய்கின்றனர். SJF Team - SP, பழனியப்பன், S.பிரசாந்த், வினோத் CJ, S.சண்முகம் விளம்பர வடிவமைப்பு செய்கின்றனர். G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இப்படத்தினை இணைந்து தாயாரிக்கிறார்கள்.

No comments:

Post a Comment