Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Saturday, 4 February 2023

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும்

 *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு*


அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொடரின் நாயகர்களில் ஒருவரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார்.






'சுழல் - தி வோர்டெக்ஸ்', 'வதந்தி - தி ஃபேபுள் ஆஃப் வெலோனி' ஆகிய அசல் தொடர்களை அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் அமேசான் பிரைம் வீடியோ, அடுத்ததாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடிக்கும் 'ஃபார்ஸி' எனும் வலைதள தொடரைத் தயாரித்து வழங்குகிறது. பிப்ரவரி பத்தாம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவிருக்கும் 'ஃபார்ஸி' தொடரில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோருடன் ராசி கண்ணா, ரெஜினா கஸண்ட்ரா, கே.கே. மேனன், அமோல் பலேகர், ஜாகிர் ஹுசைன், புவன் அரோரா, குப்ரா சையத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த வலைதள தொடருக்கு இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே உடன் இணைந்து சுமன் குமார் மற்றும் சீதா ஆர். மேனன் ஆகியோர் இணைந்து கதை, வசனம் எழுதி இருக்கிறார்கள். இந்த வலைதள தொடரை டி2 ஆர் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர்களான ராஜ் மற்றும் டி கே தயாரித்திருக்கிறார்கள். 


இந்தத் தொடருக்கான முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்திற்கான புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருக்கும் வேலன் திறந்தவெளி அரங்கத்தில் புதிர் கட்ட பாணியிலான போஸ்டரை, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் ஒன்றிணைத்தனர். இதனை 'மக்கள் செல்வன்' விஜயசேதுபதி வருகை தந்து பார்வையிட்டு, மாணவ மாணவிகளை பாராட்டினார். மேலும் தன் கையொப்பமிட்ட புதிர் கட்ட பாணியிலான போஸ்டரை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் தற்போதைய ட்ரெண்டான செல்ஃபியையும் அவர் மாணவ மாணவிகளுடன் எடுத்துக் கொண்டார். 


மாணவ மாணவிகளிடம் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பேசுகையில், '' நான் முதன்முதலாக இந்தியில் பேசி நடித்திருக்கும் வலைதள தொடர் 'ஃபார்ஸி'. பிப்ரவரி பத்தாம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. என்னுடன் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும் நடித்திருக்கிறார். இதனை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment