Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Saturday, 11 March 2023

காற்றே வராத குகைக்குள் தினமும் 14 மணி நேரம் ; ஜித்தன் ரமேஷின் ஜிலீர்

 *காற்றே வராத குகைக்குள் தினமும் 14 மணி நேரம் ; ஜித்தன் ரமேஷின் ஜிலீர் அனுபவங்கள்* 


*55 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 22 நாட்கள் குகைக்குள் நடைபெற்ற ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு*


*காற்றோட்டம் இல்லாத குகைக்குள் 22 நாட்கள் ஜித்தன் ரமேஷ் எடுத்த ரிஸ்க்*






*நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ்* சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 


இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் இராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, *காசி விசுவநாதன் மற்றும் எவர்க்ரீன் அற்புதாநந்தம்* உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் *அவுசேபச்சன்* இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்


நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடைந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெளியாகும் அவரது முதல் படம் இது என்பதால் பல ரிஸ்க்கான சாகச காட்சிகளில் கூட டூப் போடாமல் நடித்துள்ளார் *ஜித்தன்* ரமேஷ்.


அந்தவகையில் இந்த படத்தில் பூமிக்கு அடியில் 5500 சதுர அடியில் மிகப் பிரமாண்டமான குகை செட் ஒன்றை தென்காசிக்கு அருகில் உள்ள காட்டிற்குள் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்த பெரும்பாலான காட்சிகள் இந்த குகை செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன. 


குகைக்குள் காற்று தாரளமாக வருவதற்கான வழி இல்லை என்றாலும் மின்விசிறியை பயன்படுத்தினால் படமாக்கப்படும் காட்சிகளின் எதார்த்தத்தை பாதிக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு 55 டிகிரி செல்சியஸ் அனல் பறக்கும் வெப்பத்தில் 22 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்கு மேல் அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.


சில சமயங்களில் வெப்பத்தை தாங்கமுடியாமல் தண்ணீரை தன்மேல் இறைத்து சிறிதளவு வெப்பத்தை தணித்துக்கொண்டு அதன்பின்னரும் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ந்து நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். 


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*


தயாரிப்பு ; அமர் இராமச்சந்திரன்


இயக்கம் ; *அபிலாஷ் ஜி தேவன்* 


இசை ; *அவுசேபச்சன்*


ஒளிப்பதிவு ; பிரசாந்த் பிரணவம்


படத்தொகுப்பு ; அகிலேஷ் *மோகன்*


சவுண்ட் கிராபிக்ஸ் ; காந்தாரா டீம்


சவுண்ட் டிசைன் ; ராஜாகிருஷ்ணன் (காந்தாரா டீம் )


ஆக்சன் காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன் 


*லொகேஷன் ; சரவணன் சொக்கம்பட்டி* 


*ஆர்ட்டிஸ்ட் கண்ட்ரோல் ; சித்ரா*


ஒப்பனை ; ரஷீத் அஹமது (தேசிய விருது) 


மக்கள் தொடர்பு ; A.ஜான்

No comments:

Post a Comment