Featured post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம்

 *பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்* சினிமாவில் நாளுக்கு நாள் எ...

Thursday 9 March 2023

வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும்

*வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால் !!*


தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல்,  தனித்துவமான கதாபாத்திரங்களில்  மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் "நான் கடவுள் இல்லை" படத்தில் முழு நீள ஆக்‌ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டினார். அதே போல் தற்போது  நடிகர் பிரபுதேவா கதாநாயகானாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம்  விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை  பெற்று வருகிறது.





பஹீரா படத்தில் அவரது அபாரமான நடிப்பு திரையுலகத்தினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சாக்‌ஷி அகர்வாலை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய கேட்டு வருகிறார்கள். நான் கடவுள் படத்தில் தடாலடியான ஆக்சன் ரோலில் நடித்ததை அடுத்து,  பஹீரா படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து, தன் திறமையை நிரூபித்துள்ள அவர், தொடர்ந்து ஒரே சாயலில் இருக்கும் பாத்திரங்களில் அவர் தொடர்ந்து  ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தவே சாக்‌ஷி  விரும்புகிறார்.



தற்போது, அவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன, அவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்படும்.



No comments:

Post a Comment