Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Sunday 12 March 2023

கப்ஜா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

 “கப்ஜா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!! 


Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து,  இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர்.

“கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது


இந்நிகழ்வினில்


இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன்






"ஒரு படத்தின் தரம் தெரிந்து தான் நாங்கள் இந்த படத்துடன் இணைந்து இருக்கிறோம். இயக்குநர் சந்துரு நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக உழைத்து இருக்கிறார். படத்தின் டிரெய்லரை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய நடிகர் அமிதாப்பச்சன் இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் முக்கிய மைல்கல் ஆக இருக்கும். இந்த படத்தின் கதாபாத்திரம், கதை, திரைக்கதை என அனைத்தும் படத்தை மெருகேற்றியுள்ளது. படம் பார்த்த பின்னர் நான் கூறியது சரியென நீங்களும் கூறுவீர்கள். "


இயக்குநர் சந்துரு கூறியதாவது..,


"எங்கள் படம் மார்ச் 17 அன்று வெளியாகவிருக்கிறது. இந்த படத்தைத் தமிழில் வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், GKM தமிழ்குமரன் அவர்களுக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. படம் பார்த்துவிட்டு, உங்களுடைய கருத்தைக் கூறுங்கள். நன்றி"


நடிகை சுதா கூறியதாவது..,


இது தமிழ்ப் படமாகத் தான் உங்கள் முன் வரப்போகிறது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சந்துருவிற்கு நன்றி. இந்த படத்தை அவர் மிகச்சிறப்பாக உருவாக்கியுள்ளார். அவர் மீது இருக்கும் நம்பிக்கையில் தான் நாங்கள் அனைத்தையும் செய்தோம். அவர் ஒவ்வொரு காட்சியை எடுக்கும் போது, அவருக்கு இருக்கும் பூரிப்பும், ஆர்வமும் தான் எங்களை ஊக்கப்படுத்தியது. கேமரா மேன் சிறிய பள்ளி மாணவன் போல் இருந்தார், அவரை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவருடைய பணியைப் பார்த்துப் பிரமித்துப் போனோம். உபேந்திரா, ஸ்ரேயா, சந்துரு உடன் இணைந்து பயணித்தது, திரையைப் பகிர்ந்து கொண்டது  மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று விரும்புகிறேன். தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் நன்றி.


நடிகை ஸ்ரேயா சரண் கூறியதாவது..,


 " சென்னை எப்பொழுதும் எனக்கு ஸ்பெஷலாக தான் இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். இந்த படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் சந்துரு அவர்களுக்கு நன்றி. உபேந்திரா சார் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. மார்ச் 17 அன்று படம் வெளியாக இருக்கிறது. உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். நன்றி "


நடிகர் உபேந்திரா கூறியதாவது..,


"இந்த படத்தை வெளியிடப் போகும் லைகா புரொடக்‌ஷன்ஸ், GKM தமிழ் குமரன் மற்றும் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே, இது தொழில்நுட்ப கலைஞர்களின் படம் என்று உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.  இயக்குநர் சந்துருவின் நான்கு வருடக் கனவு இது. அவருடைய பெருங்கனவு இந்த படத்தின் டிரெய்லரில் தெரிகிறது. இந்த படத்தில் கிச்சா சுதீப், சிவராஜ்குமார் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருக்கின்றனர். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை. கூடிய சீக்கிரம் இங்கு நேரடியாக ஒரு தமிழ்த் திரைப்படம் பண்ண ஆவலாக இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள். "



நடிகர்கள் 


உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் 


தொழில் நுட்ப குழு 


தயாரிப்பு நிறுவனம் - Sri Siddeshwara Enterprises & Invenio Origin

தயாரிப்பு - R.சந்துரு

இணை தயாரிப்பு - அலங்கார் பாண்டியன்

இயக்கம் -  R.சந்துரு

ஒளிப்பதிவு  - A. J. ஷெட்டி 

எடிட்டிங் - தீபு S. குமார்

இசை - ரவி பஸ்ருர்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

No comments:

Post a Comment