Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Saturday 4 March 2023

பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார்

 பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் "லப்பர் பந்து" என்ற புதிய படத்தின் பூஜை இன்று (மார்ச்-3) நடைபெற்றது.


இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.  சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.


காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். 


கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், எஃப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான 

தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார்.






லவ் டுடே படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரன் பேபி ரன் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் G.மதன் எடிட்டிங்கை மேற்கொள்ள, ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்


. தயாரிப்பு மேற்பார்வையை பால்பாண்டி கவனிக்க, நிர்வாகத் தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார் ஷ்ரவந்தி சாய்நாத்.


இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது. 

.

No comments:

Post a Comment