அருள்நிதியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'டிமான்டி காலனி 2' திரைப்படம் BTG யுனிவர்சல் மூலம் பெரும் கோல்டன் டச் பெறுகிறது!
*டாப்-லீக் மென்பொருள் ஜாம்பவான் திரு. பாபி பாலச்சந்திரன் 'டிமான்டி காலனி 2' படத்தின் முழு உரிமையையும் பெற்று தயாரிப்பாளராக மாறியுள்ளார்*
பொழுதுபோக்கு ஊடக உலகில் உலகமயமாக்கல் பல தொழில் முனைவோர்களை, குறிப்பாக மென்பொருள் துறையில் இருந்தும் இதை ஆர்வத்துடன் மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறது. இன்று பொருளாதார வல்லுனர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஊடகத் துறையை மிகவும் லாபம் தரக்கூடிய ஒரு தொழில் என ஒப்புக் கொண்டுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், இது பல முன்னணி உயர்நிலை வணிக நிறுவனங்கள் சினிமாத் துறையில் தயாரிப்பு முயற்சியைத் தொடங்குவதற்கு உதவியது. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் திரு. பாபி பாலச்சந்திரன். இவர் எக்ஸ்டெரோவின் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. இது சைபர் தடயவியல், சட்ட ஆளுமை ஆபத்து மற்றும் இணக்கம் (GRC) மற்றும் டேட்டா பிரைவசி ஸ்பேஸ் ஆகியவற்றில் முன்னணி பன்னாட்டு SaaS யூனிகார்ன் நிறுவனமாகும்.
பாபி பாலச்சந்திரன் BTG Universal-ஐ தொடங்கியுள்ளார். இந்த மீடியா தயாரிப்பு நிறுவனம் ஹாலிவுட் சினிமா, இந்திய சினிமா மற்றும் பிரத்யேக டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பல வருட அனுபவத்துடன் ஏற்கனவே சினிமா தொழில்துறையில் நன்கு அறியப்பட்ட பெயரான Dr.M.மனோஜ் பெனோ அவர்கள் இந்த நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் படங்களில் பணிபுரிந்துள்ளார். பல தரமான திரைப்படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை தயாரிப்பதன் மூலம் ஹாலிவுட் மற்றும் இந்தியா இரண்டிலும் ஊடகத் துறையில் பாபி அடியெடுத்து வைக்கிறார். யுனைடெட் ஸ்டேட்ஸை தளமாகக் கொண்ட பாபி, பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டவர். தொழில்நுட்பத்தையும் பொழுதுபோக்கையும் கடந்து மற்றத் துறைகளிலும் வெற்றிகளை கொடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அவர் இந்த பணியை அர்ப்பணிப்புள்ள குழுவிடம் ஒப்படைத்துள்ளார். கம்பெனியின் தொலைநோக்குப் பார்வையானது, பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை தயாரிப்பதன் மூலம் அனைத்து துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகள் மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்குகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'டிமாண்டி காலனி 2' படத்தின் முழு உரிமையையும் பெற்று தனது பிரம்மாண்டமான தொடக்கத்தை BTG யுனிவர்சல் அறிவித்துள்ளது.
பாபி பாலச்சந்திரன் கூறும்போது, “மென்பொருளுக்கும் பொழுதுபோக்குத் துறைக்கும் இடையேயான பிணைப்பு வலுப்பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதலில் ஒரு தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நபர். தொழில்நுட்பத்தில் எனது நிபுணத்துவத்தை ஊடகத் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்க்கும்போது அது மிகவும் வலுவாக இருக்கிறது. நான் ஏற்கனவே வலுவான இருப்பை வைத்திருக்கும் மென்பொருள் உலகில் எனது முதன்மை கவனம் தொடரும். ஆனால், தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாயிலைத் திறந்து, திறமைகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன். இரண்டயும் திறமையாக சமாளிக்கும் அறிவும் பார்வையும் இருந்தால், பார்வையாளர்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை, நான் கையாள வேண்டிய ஆர்வமுள்ள பல துறைகளுக்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதாது. எனவே டாக்டர். மனோஜ் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால், எனது முக்கிய வணிகத்தைத் தொடர முடிகிறது. மேலும், இந்த முயற்சியை மேற்பார்வையிட சிறிது நேரமும் ஒதுக்க முடியும். நாங்கள் ஏற்கனவே பல வெகுஜன ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திட்டங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு நல்ல திரைப்படத்தை வாங்குவதன் மூலம் இதை தொடங்க விரும்பினோம். பல படங்களைப் பரிசீலித்த பிறகு, 'டிமான்டி காலனி 2' பொருத்தமான படமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். திகில் வகை படங்களுக்கு உலகம் முழுவதும் பார்வையாளர்கள் உள்ளனர். 'டிமான்டி காலனி1' பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கொடுத்தது. ஒவ்வொரு படத்திலும் தனது கிராஃபை உயர்த்திக் கொண்டே இருக்கும் அருள்நிதியுடன் இணைந்து 'டிமாண்டி காலனி'யின் மேஜிக்கை மீண்டும் உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அஜய் ஞானமுத்து படத்தை திறமையாகக் கையாண்டுள்ளார். மேலும், 'டிமான்டி காலனி 2' உருவாகி வரும் விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். திரைப்படம் ஒரு சிறந்த கதைக்களத்துடன் அதிநவீன விஷுவல் எஃபெக்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் இது ஒரு முழுமையான திரையரங்க அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தத் திரைப்படம், அதிக தயாரிப்பு மதிப்பு மற்றும் அசத்தலான காட்சியமைப்புடன், தமிழில் மட்டுமல்ல, இந்திய திகில் சினிமாவிலும் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கும்.
இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து, “’டிமான்டி காலனி 2’ படத்துடன் திரு.பாபி பாலச்சந்திரன் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது. சினிமாவை தனது கூடுதல் தொழிலாக மதிக்கும் மதிப்புமிக்க ஒருவரின் வருகை சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் தொழில்துறையின் மதிப்பை உயர்த்தும். திரு.பாபி பாலச்சந்திரன் மற்றும் டாக்டர்.மனோஜ் பெனோ ஆகியோரின் இத்தகைய முயற்சி, திரையுலகில் தங்கள் இருப்பை நிலை நிறுத்துவதுடன் மற்றவர்களை ஊக்குவித்து, நம்பிக்கைகுரிய இளம் திறமைகளையும் ஊக்குவிக்கும். தற்போது நாங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், ஓரிரு மாதங்களில் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் படத்தின் மிகப்பெரிய வெளியீட்டிற்கான சரியான வெளியீட்டு தேதியை பார்த்து வருகிறோம். வர்த்தக வட்டாரத்தில் இந்தத் திரைப்படத்திற்கான வரவேற்பு சிறப்பாக உள்ளது எங்களுக்கு உற்சாகமாகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
'டிமான்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித் மற்றும் அர்ச்சனா ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் சுப்ரமணியனின் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஆர்.சி.ராஜ்குமாரின் ஞானமுத்து பட்டறையுடன் இணைந்து பாபி பாலச்சந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
No comments:
Post a Comment