Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Saturday, 5 August 2023

சென்னை எக்ஸ்பிரஸ்' முதல் 'ஜவான்' படம் வரை ஷாருக்கானுடன் அற்புதமாக

 சென்னை எக்ஸ்பிரஸ்' முதல் 'ஜவான்' படம் வரை ஷாருக்கானுடன் அற்புதமாக இணைந்திருக்கும் லுங்கியின் கதை.




ஷாருக்கான் மற்றும் லுங்கி இடையேயான தொடர்பு எப்போதும் பிரபலமானது. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான லுங்கி டான்ஸில் ஷாருக் கானின் மறக்க முடியாத பங்களிப்பு ...ஜவானிலும் தொடர்கிறது. ஜவானில் அவரது சமீபத்திய ஹிட் பாடலான 'வந்த எடம்' பாடலிலும் ஷாருக் கான் லுங்கியுடன் இணைந்திருப்பது விவரிக்க இயலாத ஒரு அற்புதமான உணர்வு. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜவானின் முதல் பாடல் வெளியான பிறகு.. உலகளாவிய இசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. 


இந்தப் பாடலில் இனிமையான தற்செயலான நிகழ்வு என்றும் சொல்லலாம் அல்லது ஷாருக்கானின் அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். 'வந்த எடம்' பாடலில் மீண்டும் ஒரு முறை அவர் லுங்கியை முன்னிறுத்தி இருக்கிறார். இது ஷாருக்கானின் நட்சத்திர ஆற்றல் மட்டுமல்ல.. ரசிகர்கள் பேசுவதையும் குறிப்பிடுகிறது .லுங்கியின் தொடர்ச்சியான இருப்பு .. ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பின்னணி நடன கலைஞர்கள் லுங்கி அணிந்து, ஒரு தனித்துவமான கலாச்சார சுவையுடன் நடனத்தையும், நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள். 


மீண்டும் ஒரு முறை ஷாருக் கானுடன் ப்ரியா மணி திரை தோன்றலை பகிர்ந்து கொள்வதால்..படத்தைப் பார்க்கத்  தூண்டும் காரணி மேலும் அதிகரிக்கிறது. பிளாக்பஸ்டர் ஹிட்டான 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் இடம்பெற்ற '1234 கெட் ஆன் தி  டான்ஸ் ஃப்ளோர்..' என்ற பாடலுக்குப் பிறகு  இந்த இணை.. மீண்டும் ஒரு முறை திரையில் பார்ப்பது அருமை. பிரியாமணி மற்றும் ஷாருக்கான் மீண்டும் இணைவதன் மூலமும், லுங்கியில் தோற்றமளிப்பதன் மூலமும் 'வந்த எடம்.' அவர்களின் முந்தைய ஒத்துழைப்பின் மாயாஜாலத்தை மீண்டும் திரையில் உருவாக்க தயாராக உள்ளது. 


துடிப்பான ஆற்றல்... கண் கொள்ளா காட்சி அமைப்பு மற்றும் லுங்கியின் அடையாளச் சின்னம் ஆகியவற்றுடன் இந்த பாடல் ஷாருக்கானின் இசை மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டிலும் நீடித்த தொடர்பின் சான்றாக உள்ளது. தற்போது இந்த பாடல் யூட்யூப்பில் 24 மணி நேரத்தில் 46 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு உலக இசை அரங்கில் பெரும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது. 


'ஜவான்' படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் சர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment