Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Sunday, 13 August 2023

கிருஷ்ணா - ஈடன் நடிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் " பல்லவபுரம் மனை

 கிருஷ்ணா - ஈடன் நடிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம்  " பல்லவபுரம் மனை எண் 666 " ரிஷி இயக்குகியுள்ளார்.


அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள முற்றிலும் மாறுபட்ட ஹாரர் படம் " பல்லவபுரம் மனை எண் 666 "  


திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷி.


ஈரம், அனந்தபுரத்து வீடு, அழகிய அசுரா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.





















ஆண்டவ பெருமாள், இருக்கு ஆனா இல்ல, பனிவிழும் நிலவு, திரைக்கு வராத கதை, ழகரம், துரிதம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த ஈடன் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் ரேகா சுரேஷ், சுனில், மாலா, நேகா, ரக்ஷை, ஸ்ரீஜித், ராம்கி, சுதந்திரம், சோலை ஆகியோர் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவு - வில்லாலன்

இசை  - மாருதி நம்பி

பாடல்கள் - முத்துபாரதி,  சிந்துநதி பூ செந்தமிழன் 

எடிட்டிங் - R.T. அண்ணாதுரை

நடனம் - சம்பத்ராஜ்

மக்கள் தொடர்பு - மணவை புவன்.

தயாரிப்பு மேற்பார்வை - சாலைப்பட்டி N.P. மனோகரன்.

Vfx - ரக்ஷய் 

தயாரிப்பு  - அஷ்டலக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்.

கதை - S.முத்துபழனியப்பன் 


திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் K. பாலசந்தந்தரிடம் உதவி இயக்குனரா பணியாற்றிய ரிஷி. 


படம் பற்றி இயக்குனர் ரிஷி பேசியதாவது...


வெளிநாட்டில் பணிபுரியும் தருண் (கிருஷ்ணா). அவனது மனைவி இறந்த பிறகு, தனது 6 வயது குழந்தை ஜனனியை (நேகா) கவனித்துக்கொள்ள, சினேகாவை (ஈடன்) திருமணம் செய்து கொண்டான். ஆனால் ஜனனி, சினேகாவை தன் தாயாக கருதாமல், சித்தியாகவே பாவிக்கிறாள். ஜனனி தன் தோட்டத்தில் இருந்த ரோஜா பூவுடன் உறவை வளர்த்து, அதை தன் தாயாக கருதி, அந்த ரோஜாவை அம்மா என்று அழைக்கிறாள். அந்த ரோஜா, ஓர் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. ஜனனி ரோஜாவின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தாள், அந்த ரோஜாவும், ஜனனியை தன் மகளாகவே கருதியது. ஒரு தாயாக, அனைத்து இன்பங்களையும், அரவணைப்பையும் ஜனனிக்கு கொடுக்கிறது. தன் மகளை பார்க்க தருண் சென்னைக்கு வருகிறான். அவன் தனது வீட்டிற்கு வந்தது முதல், பல்வேறு அசாதாரண நிகழ்வுகளையும், துன்பங்களையும், அந்த ரோஜா பூவில் உள்ள ஆன்மாவால்  அனுபவிக்கிறான். 


ஏன் ஜனனி மீது அன்பு செலுத்தும் ஆன்மா, அவள் தந்தையை பழி வாங்க துடிக்கிறது? தருண் என்ன தவறு செய்தான்? தருண் அந்த ஆன்மாவிடமிருந்து தப்பிப்பிழைத்தானா?  இக்கேள்விகளுக்கான விடையே 'பல்லவபுரம் மனை எண் 666' திரைப்படம்.


இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் 'ஶ்ரீ பஞ்சாட்சரம் ஃபிலிம் மேகர்ஸ்' வெளியிடுகிறார்கள்.

No comments:

Post a Comment