முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் " லாக் டவுன் நைட்ஸ் " ( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்.
ஷாம் நடிப்பில் முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸில் படமாக்கப் பட்டு வெளியான " காவியன் " படத்தை தயாரித்த 2m சினிமா வினோத் சபரீஷ் தற்போது கிஷோர், பூஜா காந்தி நடிப்பில் உருவாகி வரும் " சம்ஹரிணி " என்ற கன்னட படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் படம் வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து 8 தோட்டாக்கள்,
ஜிவி போன்ற வெற்றிப்படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கும் " லாக் டவுன் நைட்ஸ் " என்ற படத்தை மிகுந்த பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறார்.
Netflix ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட " பூச்சாண்டி " படத்தில் நாயகியாக நடித்த ஹம்ஷினி பெருமாள் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர்,இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன்,
மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்தில் வில்லனாக மிரட்டிய மதியழகன், பூச்சாண்டி படத்தில் வில்லனாக நடித்த லோகன், கோமளா நாயுடு ஆகியோர் முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளனர்.
அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
விஜய் சேதுபதி நடித்த " பண்ணையாரும் பத்தமினியும் " படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஜெஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
பாடல்கள் - சிநேகன், சாரதி.
அசுரன், விடுதலை, டிரைவர் ஜமுனா போன்ற வெற்றிப் படங்களுக்கு எடிட்டிங் செய்த ராமர். R எடிட்டிங் செய்கிறார்.
இணை தயாரிப்பு - அர்த்தனாஸ் டிரேடிங் சுபாஸ் V. S
ஸ்டில்ஸ் - சுரேஷ் மெர்லின்
மக்கள் தொடர்பு - மணவை புவன்
ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போன்ற வெற்றிப் படங்களை
இயக்கிய S.S.ஸ்டான்லி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
தயாரிப்பு - 2 M சினிமா வினோத் சபரீஷ்.
இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றது.
தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை இசையாமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டணி வெளியிட்டார். அது தற்போது இணைய தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
No comments:
Post a Comment