Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Wednesday 1 November 2023

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில்,

 *ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள 'அண்ணபூரணி- The Goddess of Food' படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது!*




லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டிசம்பர் எப்பொழுதும் திருவிழா காலம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


'அன்னபூரணி - The Goddess of Food' படம் சரியான திட்டமிடலோடு சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.


படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment