Featured post

Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!

 *Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!* The release of Dunki Drop 4 has set the excitement at its peak to witne...

Wednesday 1 November 2023

பூரி ஜெகன்னாத்தின் 'டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக ராம் பொத்தினேனி

 *பூரி ஜெகன்னாத்தின் 'டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக ராம் பொத்தினேனி 6 பேக்ஸ் வைத்துள்ளார் மற்றும் இதன் படப்பிடிப்பு மும்பையில் மீண்டும் தொடங்கியது!*



ஹீரோ ராம் பொத்தினேனி மீண்டும் உஸ்தாத் மோடுக்கு திரும்பியுள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் தனது பான் இந்தியா படமான ’டபுள் ஐஸ்மார்’ட்டின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. தனது முந்தைய படமான ’ஸ்கந்தா’விற்காக உடல் எடையைக் கூட்டிய ராம், ’டபுள் ஐஸ்மார்ட்’டிற்காக ஏற்றிய உடல் எடையைக் குறைத்துள்ளார்.


நடிகர் ராம் திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்துள்ளார் மற்றும் அந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ராமின் உடலை இந்தப் படத்திற்காக இப்படி மாற்றியதன் கிரெடிட் முழுவதும் பூரி ஜெகன்நாத்திற்கே சேரும்.  


ராம் மற்றும் பூரி இணந்து கொடுத்த பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்க’ரின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது. மாஸ் மற்றும் ஆக்ஷன் பட பிரியர்களுக்கு இப்படம் புதிய அனுபவத்தை தரும். ’டபுள் ஐஸ்மார்ட்’ படம் தொழில்நுட்ப ரீதியாக உயர் தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மகா சிவராத்திரிக்கு மார்ச் 8, 2024 அன்று ’டபுள் ஐஸ்மார்ட்’ வெளியிடப்படும்.


*நடிகர்கள்:* ராம் பொத்தினேனி, சஞ்சய் தத்


*தொழில்நுட்பக் குழு:*

எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்நாத்,

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,

பேனர்: பூரி கனெக்ட்ஸ்,

சி.இ.ஓ.: விசு ரெட்டி,

ஆக்‌ஷன்: கெச்சா

No comments:

Post a Comment