Featured post

The Door Movie Review

The Door Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம door ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jaaidev  direct பண்ண இந்த படத்துல bhavana , Ganesh ...

Tuesday, 2 January 2024

நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்' என்ற மியூசிக் லேபிளை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்

 *'நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்' என்ற மியூசிக் லேபிளை நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது!*



நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தனது சமீபத்திய முயற்சியான 'நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்' அறிமுகத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.


ஒரு டைனமிக் பொழுதுபோக்கு நிறுவனமான நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தொடர்ந்து பல எல்லைகளை உடைத்து, பல்வேறு ஊடகங்களில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை செய்து வருகிறது. அந்த வரிசையில் 'நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்' அறிமுகமானது படைப்பாற்றலை வளர்ப்பதற்கும், வளர்ந்து வரும் இசைத் திறமையாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்குமான தளமாக இது அமையும்.


நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் சொந்த தயாரிப்புகளில் இருந்து அற்புதமான இசையமைப்புகளை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஒலிப்பதிவு உலகில் புதிய மற்றும் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டு வரும் சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து இசைத் துறையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்குவதை நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.


நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனர் மற்றும் புரொடியூசர் ராமச்சந்திர சக்கரவர்த்தி இதுபற்றி கூறும்போது, "'நைட் ஷிப்ட் ரெக்கார்ஸ்'ஸை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மியூசிக் லேபிள் கலை மற்றும் ஆக்கப்பூர்வ ஆய்வுக்கான தளமாக உருவாக்கியுள்ளோம். உலகெங்கிலும் உள்ள விதவிதமான இசைத்துணுக்குகள் மற்றும் மாறுபட்ட ஒலிப்பதிவுகளின் தொகுப்பை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்" என்றார்.


கிறிஸ்டோ சேவியரின் இசையில், நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளிவரவிருக்கும் மலையாளத் திரைப்படமான 'பிரமயுகம்' திரைப்படத்தின் விழாவில் 'நைட் ஷிப்ட் ரெக்கார்ட்ஸ்' மியூசிக் லேபிளின் தொடக்க வெளியீடு இருக்கும்.

No comments:

Post a Comment