Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Thursday, 14 March 2024

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD'

 *மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘கல்கி 2898 AD' படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.*



 ‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’வாக பிரபாஸ் !! 


மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும்  ‘கல்கி 2898 A.D’  படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.  சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர்.  ‘கல்கி 2898 A.D.’ படத்தில்  'பைரவா' என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!.  படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ்  ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்த செய்தியினை சமூக ஊடகங்களில் ‘கல்கி 2898 AD’  படத்திலிருந்து பிரபாஸின் ‘பைரவா’ படத்தைப் பகிர்ந்து, காசியின் எதிர்கால தெருக்களிலுருந்து, ‘கல்கி 2898 AD’ இன் பைரவா உங்களுக்காக என தெரிவித்துள்ளது படக்குழு. 


#Prabhas #ki2898ADonMay9”


புகைப்படத்தின் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க  மிரட்டலாக இருக்கிறது.  முழுமையான  கறுப்பு நிற ஆடையுடன், தலையில்  கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான  ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.


Check it out here:

https://x.com/kalki2898ad/status/1766066282846400865?s=46


சமீபத்தில்தான் நடிகர் பிரபாஸ், நடிகை திஷா பதானி, இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் பிரியங்கா தத் ஆகியோர் இப்படத்தின் ஒரு பாடலைப் படமாக்க இத்தாலிக்குச் சென்றிருந்தனர்.


இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம், ஒரு பன்மொழித் திரைப்படமாக இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது.  புராணக் கதைகளின் அடிப்படையில்  எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும். இப்படம் மே 9, 2024 அன்று பான்-இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment