Featured post

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி

 *பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நாக் அஸ்வின், வைஜயந்தி மூவீஸின் கல்கி 2898 AD திரைப்படம்  1000 கோடி  வசூலைக் கடந்து வரலாறு படைத்துள்ளத...

Friday 15 March 2024

பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி

 *பிரைம் வீடியோ திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடப்படவிருப்பதை அறிவித்தது* நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார்.

 

“இன்ஸ்பெக்டர் ரிஷி” இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 29 தேதி அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

 

அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யுங்கள்

https://x.com/PrimeVideoIN/status/1768134578726678603?s=20

 

மும்பை, இந்தியா- மார்ச் 14, 2024 - இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, வரவிருக்கும் அதன் தமிழ் ஒரிஜினல் திரைப்படமான “இன்ஸ்பெக்டர் ரிஷி” வெளியிடப்படும் தேதியை இன்று அறிவித்தது. நந்தினி ஜே.எஸ் (Nandhini JS,)  உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்த திகிலூட்டும் க்ரைம் டிராமாவில்  பல்துறை திறன் கொண்ட நடிகர் நவீன் சந்திரா(Naveen Chandra) வுடன் இணைந்து சுனைனா(Sunainaa), கண்ணா (Kanna )  ரவி (Ravi),  மாலினி (Malini ) ஜீவரத்தினம், (Jeevarathnam) ஸ்ரீகிருஷ்ண தயாள்(Srikrishna Dayal,) மற்றும் குமரவேல் (Kumaravel) உள்ளிட்ட திறமைவாய்ந்த நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது “இன்ஸ்பெக்டர் ரிஷி” பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில் இணைக்கப்பட்ட புத்தம் புதிய திரைப்படமாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒற்றை உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு  ₹1499 மட்டுமே செலுத்தி சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு அனைத்தையும் அனுபவித்து மகிழலாம்.


மர்மங்களால் சூழப்பட்ட சிக்கலான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை எதையும் சந்தேகக் கண்களுடன் அணுகும் ரிஷி நந்தன், என்ற காவல் ஆய்வாளர் ஆராயத் தொடங்கும் போது, அவரது உறுதியான கருத்துக்களுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள நேரும் அவரது பயணத்தின் ஒரு அழுத்தமான கதையை “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படம் விவரிக்கிறது. மனதை நிலைக்குலையச்செய்யும் இந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த வழக்கின் விசாரணையின் ஊடே, குற்றத்தின் மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும் தனது ஆழ்மனதில் பீறிட்டு எழும் உணர்வுகளை கையாளும் போதும் இருநிலைகளிலுமே இன்ஸ்பெக்டர் ரவி அச்சமூட்டும் மாபெரும் தடைகளை எதிர்கொள்கிறார்,  


“நாடு முழுவதிலுமிருந்து வரும் வளமான, ஆழமாக வேரூன்றிய மற்றும் கலாச்சார ரீதியாக மனதை ஆழ்ந்து போகச்செய்யும் கதைகளின் வரிசையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இங்கே பிரைம் வீடியோவில், நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் பிராந்திய உள்ளடக்கத்தோடு கூடிய எங்களின் கலைத் தொகுப்பை நாங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்து கொண்டிருக்கும் வேளையில், நந்தினி ஜே.எஸ் உருவாக்கிய முதுகுத்தண்டை சிலிர்க்கச் வைத்து உறையச்செய்யும் திகில் நிறைந்த தமிழ் ஒரிஜினல் டிராமா தொடரான “இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தை வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.” என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார். "அமானுஷ்ய நிகழ்வுகளின் கூறுகள் நிறைந்த இந்த மனதைக் கொள்ளைகொள்ளும் கிரைம் தொடரின் புலன் விசாரணைக்கு நந்தினி வழங்கும் ஒரு தனித்துவமான பெண்ணியப் பார்வைக் கோணம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது."


“ஒரு படைப்பாளியாக, “இன்ஸ்பெக்டர் ரிஷி”  திரைப்படத்தில் பணிபுரிந்தது ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சிகாரமான அனுபவமாக இருந்தது மற்றும் இந்த கூட்டாண்மைக்கு  நான் மிகவும் நன்றி பாராட்டுபவனாக இருக்கிறேன். திகில் மற்றும் மர்மங்களுடன் போலீஸ் நடைமுறைகளை ஒருங்கிணைத்து வழங்கியது கதை சொல்லல் செயல்பாடுகளில் இன்ஸ்பெக்டர் ரிஷியின் அச்சமூட்டும் விந்தையான உலகத்தினுள் மேலும் ஆழமாக சென்று ஒரு புதிய பரிமாணத்தை ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.” என்று நந்தினி ஜே.எஸ்.கூறினார்  "நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள், குமரவேல் உள்ளிட்ட நடிகர்களின் உன்னதமான நடிப்பும், படக் குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளும் எனது பார்வைக் கோணத்தை திரையில் அழகாக காட்சிப்படுத்த உதவியிருக்கிறது.”

No comments:

Post a Comment