Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Friday, 22 March 2024

பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன்

 *பிரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது*  









 ப்ரைம் வீடியோ, 2023- ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு இந்தியனாலும் மிகவும் விரும்பப்படும் முன்னணி பொழுதுபோக்கு தளமாக விளங்குவதற்கான தனது உத்திரவாதத்தை மீண்டும் வலியுறுத்தும் விதமாக    அனைத்து மொழிகளின் உள்ளடக்கங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம்  .  

பல்வேறு வகையான புதிய தொடர்கள்,  மனதைக் கவர்ந்த மீண்டும் திரையிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள், ஒரிஜினல் திரைப்படங்கள், இணைத் தயாரிப்புகள், திரையரங்கு வெளியீட்டிற்குப் பின்னர் வெளியிடப்படும் திரைப்படங்களின் வரிசையை வெளிவரவிருக்கும் அதன் நிகழ்ச்சிகளின் பட்டியலில் இடம்பெறச்செய்திருக்கிறது      

 

வெளியிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் குறித்த விவரங்கள் பின் இணைப்பில் தனியே .கொடுக்கப்பட்டுள்ளது. டைட்டில்ஸ், கிரடிட்ஸ், கீ ஆர்ட்ஸ் மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்களின் பட்டியலை அணுக இங்கே கிளிக் செய்யுங்கள். 

 

YT - https://youtu.be/6UH2bOLorWQ

X - https://x.com/primevideoin/status/1770096959799587197?s=46&t=j1_icXuHEka-TZ4MNka2ug

IG - https://www.instagram.com/reel/C4sw2TWN_0T/?igsh=ZDZnNzF6anh2bDhi

FB - https://www.facebook.com/share/r/EJHMThAt7Lx3b9MX/?mibextid=QwDbR1

 

 

மும்பை, இந்தியா—மார்ச் 19, 2024— இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோ, பிரைம் வீடியோ பிரெஸெண்ட்ஸ் இந்தியா இரண்டாவது காட்சித் தொகுப்பில் இன்றைய தேதி வரையிலான தனது மிகவும் பேரார்வமிக்க பல்வேறு வகை உள்ளடக்கங்கள் கொண்ட கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது அவற்றில் பெரும்பாலானவை அடுத்த 2 ஆண்டுகளில் இந்த சேவையில் வெளியிடப்படும். 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப், புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது. .


எதிர் வரவிருக்கும் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்கள், குடும்பத்திலுள்ள அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு பரந்த அளவிலான பிரிவு வகைகளின் உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு விரிவான எண்ணிக்கையிலான தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  விரிவான நீண்ட பட்டியலை வழங்குகிறது. விறுவிறுப்பான த்ரில்லர்கள் மற்றும் மனதை ஆழ்ந்து போகச்செய்யும் டிராமா, விலா எலும்பை நோகச்செய்யும் நகைச்சுவை தொடர்கள், மற்றும் முதுகெலும்பை சில்லிடச்செய்யும் திகில் படங்கள், முதல்  ஆவலைத் தூண்டும் புதிரான கற்பனை கலவாத நிகழ்ச்சிகள், வயது வந்த இளைஞர்களுக்கான கவர்ச்சிகரமான கதைகள், அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த, மற்றும் மனதைக் கவரும் இசையுடன் கூடிய டிராமாக்கள் போன்ற பலதரப்பட்ட வகையிலான இந்தப் பட்டியல் மிகச்சிறந்த உள்ளூர் கதைகளை திரைக்கு கொண்டுவருகிறது. இந்தியாவின் மிகவும் மதிப்பு வாய்ந்த சில திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களால் திரையரங்குகளில் வெளியிடபட்ட பிறகு இந்தச் சேவை மூலமாக அனைத்து மொழிகளிலும் வழங்கப்படும் திரைப்படங்களுக்கும் கூடுதலாக வழங்கப்படுபவை இவை. 


“பிரைம் வீடியோவில், எங்கள் கவனம் முழுவதும், ஒரு முழுமையான மிகச்சிறந்த பல்வேறு வடிவத்திலான பொழுதுப்போக்கு அம்சங்களை வழங்கி இந்திய வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த சேவையை அளிப்பதில் நிலைகொண்டுள்ளது. சீரற்றவைகளை முறியடித்து ஒதுக்கித் தள்ளும் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள், நேரடி சேவை வெளியீடுகள் தொடங்கி அனைத்து மொழிகளிலும் மிகச்சிறந்த மாபெரும் வெற்றி பெற்ற சில திரைப்படங்களின் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகான வெளியீடுகள் வரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொழுதுபோக்கிற்கான  முதல் தேர்வாக நாங்கள் திகழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்," என்று, பிரைம் வீடியோ,இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம் கூறினார். “2023 ஆம் ஆண்டில் நாங்கள் வழங்கிய உள்ளடக்கங்கள் சர்வதேச அமைவிடங்களில் புதிய வாடிக்கையாளர் களை ஏற்றுக்கொள்வதிலும் பிரைம் உறுப்பினர் ஈடுபாடுகளிலும் இந்தியாவை முன்னணியில் திகழச்செய்யும் வகையில் புதிய பாதைகளை வகுத்தமைத்தது. எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது காட்டிய அன்பு எங்களை மேலும் பணிவுறச் செய்தது, மேலும் எங்கள் சேவையில் வழங்கப்படும் ஒவ்வொரு கதையும் யாராவது ஒருவரின் மனதுக்கு விருப்பமான நிகழ்ச்சியாக அல்லது திரைப்படமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனுடன் ஒத்திசைந்து செயல்படும் வகையில், இன்று வரையிலான எங்களின் மிகப்பெரிய, மிகவும் பல்வேறு வகைப்பட்ட பட்டியலை   வெளியிடுவதில் நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம், மற்றும்  நாங்கள் வெளியிடவிருக்கும் தொடர்களும் திரைப்படங்களும் இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” 


"பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான மற்றும் இந்தியாவில் வேரூன்றிய  கதைகளை காட்சிப்படுத்துவதற்கான உலகளாவிய மையமாக இருப்பதே எங்களின் தொடர்ந்த  இயக்கச் செயல்பாடாக இருக்கிறது" என்று பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித் கூறினார். “2023 ஆம் ஆண்டில் மட்டும் மொத்த 52 வாரங்களில் 43 வாரங்களில், எந்தவொரு வார காலத்திலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் எங்கள் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் கண்டு களிக்கப்பட்டு உலகளவில் பிரைம் வீடியோவில் முதல் 10 இடங்களைப் பெற்று பிரபலமடைந்தது., தேசிய மற்றும் உலகளவில் எங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை காண்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இந்திய உள்ளடக்கத்தை உலக அரங்கில் வெற்றி வாகைசூடச் செய்ய எங்களுக்கு மென்மேலும் உத்வேகம் அளிக்கிறது. கதாசிரியர்கள்  மற்றும் திறமையாளர்களுக்கான ஒரு இல்லமாக, இந்திய பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்த சில சிறந்த திறமையாளர்களின் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளோம் மற்றும் புத்தம் புதிய, வலிமையான, மன எழுச்சியை அளிக்கவல்ல மற்றும் பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகளை படைப்பதற்கான ஒரு ஆற்றல்மிக்க, புதிய கருத்துக்களுக்கு அதிகாரமளிக்கிறோம் எதிர் வரவிருக்கும் எங்களின் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவில் இருந்து அழுத்தமான கதைகள் மென் மேலும் அதிகமான எண்ணிக்கையில் வெளிவர வழி வகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”  


அனைத்து டைட்டில்ஸ், கிரடிட்ஸ், புகைபடங்களின் பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். - https://drive.google.com/drive/folders/1UAYiybPbQRpE81427ENuJyK2ji2NCsPd

No comments:

Post a Comment