*நடிகை கயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது!*
பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர்கள் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி இருக்கிறது. படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையாராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார். மேலும் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
*நடிகர்கள்*: கயல் ஆனந்தி, ஆர்.கே சுரேஷ், விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
*தொழில்நுட்பக் குழு விவரம்:*
இயக்குநர்: ராஜசேகர்,
தயாரிப்பாளர்: ரஞ்சனி,
தயாரிப்பு: பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ்,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
ஒளிப்பதிவு: இளையராஜா,
இசை: சுதர்ஷன்,
ஒரு பாடல்: ஜோகன் செவனேஷ்,
கலை: டி.என். கபிலன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.
No comments:
Post a Comment