Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Saturday, 30 March 2024

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி

 கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி:



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தன்னார்வல நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH - NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது. 


ஆனால், 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றது. அங்கு இலவச கல்வி பயின்றுவந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது. மேலும், பதினாறு கோடி மதிப்பிலான பள்ளியின் சொத்தை ஆலிவர் சாலமன் என்வருடன் இணைந்து மேரு மில்லர் சட்ட விரோதமாக விற்று ஊழல் செய்துள்ளார். 


இதனை வன்மையாக கண்டித்து பத்திரிக்கையாளர் திரு.சிவராமன் அவர்கள் மேரு மில்லரை பணி நீக்கம் செய்ய வேண்டி ஐஏஎஸ் அதிகாரி திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புதிய செயலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், கேள்விக்குறியாக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் கல்விநலன் காக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

No comments:

Post a Comment